பிரதமர் மோடி தங்கியிருக்கும் நியூயார்க் ஹோட்டல்: ஒரு நாள் வாடகை என்ன தெரியுமா?

Published : Jun 21, 2023, 02:55 PM ISTUpdated : Jun 21, 2023, 03:03 PM IST
பிரதமர் மோடி தங்கியிருக்கும் நியூயார்க் ஹோட்டல்: ஒரு நாள் வாடகை என்ன தெரியுமா?

சுருக்கம்

பிரதமர் மோடி தங்கியிருக்கும் நியூயார்க் ஹோட்டல் அறைகளின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது

பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் நியூயார்கில் தொடங்கியுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி, பின்னர் வாஷிங்டன் சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்திக்கவுள்ளார். வெள்ளை மாளிகையில் அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி உரையாற்றவும் உள்ளார்.

இந்த நிலையில், நியூயார்க்கில் பிரதமர் மோடி தங்கியிருக்கும் ஹோட்டல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்ரல் பூங்காவில் இருந்து 10-12 நிமிடங்கள் தொலைவில் மேடிசன் அவென்யூவில் உள்ள லோட்டே நியூயார்க் ஹோட்டலில் தான் பிரதமர் மோடி தங்கியுள்ளார். இதற்கு முன்பு 2019 மற்றும் 2014 ஆம் ஆண்டு நியூயார்க் பயணத்தின் போது இந்த ஹோட்டலில்தான் பிரதமர் மோடி தங்கியிருந்தார்.

டைட்டானிக் கப்பல்: கடலுக்கடியில் கேட்ட இடி சத்தம்! மாயமான நீர்மூழ்கிக் கப்பல்..பயணிகள் கதி என்ன?

ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட இந்த ஹோட்டலில் 733 விருந்தினர் அறைகள் மற்றும் சூட் ரூம்கள் உள்ளன. நியூயார்க் நகரத்தின் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றாக கருதப்படும் இந்த ஹோட்டலில், கிங் சைஸ் படுக்கைக்கு ஒரு இரவுக்கு வாடகையாக ரூ.48,000 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஹோட்டலின் இணையதள தகவலின்படி, அதிக வசதிகள் மற்றும் அதிக இடவசதியுடன் கூடிய அறைகளை பொறுத்து விலை மாறுபடுகிறது. அந்த வகையில், ஹோட்டலின் ஆடம்பரமான பென்ட்ஹவுஸ் சூட் ரூமின் வாடகையாக ஒரு இரவுக்கு சுமார் ரூ. 12.15 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!