எகிறி அடிக்கும் கொரோனா.. 18 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. மீண்டும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்..

Published : Jul 07, 2022, 10:47 AM IST
எகிறி அடிக்கும் கொரோனா.. 18 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. மீண்டும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்..

சுருக்கம்

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 16,159 ஆக இருந்த நிலையில், இன்று 18,936 ஆக அதிகரித்துள்ளது.   

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,936 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 16,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 18,986 ஆக அதிகரித்துள்ள்து. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,34,59,239 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:தமிழகத்தில் 3 ஆயிரத்தை நெருங்கிறது தினசரி கொரோனா… சென்னையில் 1,062 பேருக்கு தொற்று!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 14,650  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,21,977 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,19,457 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:மக்களே உஷார்... கைமீறிப் போகும் கொரோனா , தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? அமைச்சர் எச்சரிக்கை.

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை  5,25,305 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.21 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.27 % ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.52 % ஆக உள்ளது. இந்தியாவில் 198.33 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,44,489 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!