
அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பேசிய பல சர்ச்சைகள் ஏற்பட்டும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசிய இசையமைப்பாளர் இளையராஜா தற்போது மாநிலங்களவை நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதற்கு தான் அவ்வளவுமா என்று நினைக்க தோணுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இவர் 1976 ஆம் ஆண்டு முதன்முதலாக அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்தார். அப்போது தான் அவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அன்று முதல் தற்போது வரை பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அடிதூள். போட்ரா வெடிய.. எம்பி ஆகிறார் இசைஞானி இளையராஜா; பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இதுவே அவருக்கு தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பி பதவியை பெற்றுத்தந்துள்ளது. இதை அடுத்து பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே தனியார் அமைப்பு ஒன்று மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார் சம்பவத்திற்கு தற்போது அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று நினைக்க தோணுகிறது. ஏனேனில் அவர் எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றும் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது என்றும் இளையராஜா குறிப்பிட்டிருந்தார். மேலும், அம்பேத்கர் இன்று இருந்திருந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு பெருமிதம் கொண்டிருப்பார். ஏனெனில் அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என்றும் இளையராஜா பாராட்டியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவதே தவறு என்று ஒரு தரப்பினர் கூறினர்.
இதையும் படிங்க: எம்.பி பதவி இப்படித்தான் கிடைச்சதா? கலாய்க்கும் நெட்டிசன்கள்.. ஒன்றுதிரண்ட பாஜக - ட்விட்டரில் போர் !
பிரதமரை தனது ஆத்மார்த்த தலைவர் என இளையராஜா கூறியிருந்தால் அதில் யாரும் தலையிடப் போவதில்லை. அம்பேத்கருடன் மோதியை ஒப்பிட்டுப் பேசியதுதான் தவறு எனவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, கறுப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என்ற வார்த்தைகளை சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். யுவனின் பதிவு மூலம் இளையராஜாவின் வீட்டுக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இதனை விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்று தமிழனாக இருக்க வேண்டும் அல்லது திராவிடனாக இருக்க வேண்டும். இதில் குழப்பம் இருக்கக் கூடாது. தென்னாப்பிரிக்காவில் அனைவருமே கறுப்பாக உள்ளனர். அவர்கள் திராவிடர்களா? என விமர்சித்தார். இப்படி இளையராஜாவின் கருத்து பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அப்போதே இவர் எம்.பி. ஆக தான் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அது போலவே மாநிலங்களவை உறுப்பினர்களாக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.