independence day 2022: யார் இந்த அம்ரிதா தேவி; மரத்தைக் காக்க 3 மகள்களுடன் உயிர்நீத்த இயற்கை போராளி!!

By Dhanalakshmi G  |  First Published Aug 6, 2022, 10:46 AM IST

75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறோம். சுதந்திரம் கிடைத்தது மட்டுமின்றி, கிடைத்த சுதந்திரத்தை பாதுகாக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் எப்படி நமது முன்னோர்கள் போராடினார்கள், உயிர் நீத்தார்கள் என்பதை இந்தக் கட்டுரை நமக்கு எடுத்துரைக்கிறது. 


மேதா பட்கர் 

Tap to resize

Latest Videos

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி பிறந்தவர், இந்தியாவில் பிரபலமாக அறியப்பட்ட சமூக உரிமைப் போராளி மேதா பட்கர்.  சமூகப் பணியியலில் முதுகலை பட்டம் பெற்றவர் தன்னை அதிகமாக சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார். 1985ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில்  நர்மதா நதிக்கு குறுக்கே  கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மேற்கொண்டார். இங்கிருந்தவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நர்மதை பாதுகாப்பு இயக்கம் துங்கினார். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இருந்தாலும் அந்த இடத்தில் அணை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதற்குப் பின்னரும் உண்ணாவிரதம் இருந்தார்.

நம்மாழ்வார் 


தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி வந்தார். 1938, மே 10 ஆம் தேதி, தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியில் பிறந்தார். சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றியவர். தொழில்மயமாக்கல், சுற்றுச்சூழல் மாசு மற்றும் பி.டி. கத்திரிக்காய்க்கு எதிராக கடுமையாக போராடி வந்தார். அனுமதி போன்றவற்றிற்கு எதிராக போராடி வந்தார். 


வந்தனா சிவா

 
சுற்றுச்சூழல் பெண் போராளிகளில் முக்கியமானவர் வந்தனா சிவா. 1952ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி டேராடூனில் பிறந்தார். இவர் எழுத்தாளரும் கூட. இயற்பியல் துறையை துறந்துவிட்டு, டேராடூனில் சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளை துவக்கினார். நர்மதை நதியை காப்பதற்காக போராடினார். இயற்கையை அறிவியலால் வெல்ல முடியாது என்றார். ஐவரும் பி.டி. கத்திரி, மரபணுப் பொறியியல் ஆகியவற்றை எதிர்த்தார். 

தியோடார் பாஸ்கரன்


தமிழகத்தின் சூழலியல் அறிஞர் தியோடார் பாஸ்கரன். 1940ஆம் ஆண்டு தாராபுரத்தில் பிறந்தவர். வரலாற்றுத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்று, தலைமைத் தபால் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

ஒரு முண்டாசு... இரு கோடு மீசை... மகாகவி பாரதியின் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை..!

மரம் வளர்ப்பை ஊக்குவித்தார். மரங்கள் வளர்த்தளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து அதற்காக மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கூறியவர். இயற்கையை சுரண்டுவதால்தான், மனிதன் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறான என்று கூறி வந்தார்.  இயற்கையை காக்க வேண்டும் என்றார்.

வீரபத்ரன் ராமநாதன்


புவி வெப்பமாதல் இன்று பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது. பருவ மழை முதல், அதிக வெப்பம், பனிமலைகள் உருகுதல் என பல்வேறு இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதை 1980ஆம் ஆண்டுகளிலேயே வலியுறுத்தியவர் வீரபத்ரன் ராமநாதன். 1944ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தவர். சிறு வயதில் பெங்களூருவில் தந்தையுடன் குடியேறினார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இளங்கலை பொறியியல், இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அமெரிக்காவிளும் உயர்கல்வி பயின்றவர். சூரிய சக்தி சுற்றுச் சூழலுக்கு நல்லது என்றார். கார்பன்-டை-ஆக்ஸைடால் காரணமாக சீதோஷண மாற்றம் ஏற்படுகிறது என்றார். இமயமலை உருகுவது, கடல் மட்டம் உயர்வதை உதாரணங்களாக கூறி இருந்தார். 

Mettur Dam: மேட்டூர் அணை பற்றிய நீங்கள் இதுவரை அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்...தொடக்கம் முதல் இன்று வரை..!
அம்ரிதா தேவி


மரங்களை வெட்டுவதை தடுக்க உயிரைக் கொடுத்தவர் அம்ரிதா தேவி. மரங்களின் தாய் என்று அழைக்கப்பட்டவர். மரங்களை பாதுகாக்க 363 பேர் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த சம்பவம் 1730ஆம் ஆண்டில் இந்தியாவில்தான் நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில், கெஜார்லி கிராமப்பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது வழியில் இந்த கிராமத்தைச் சேர்ந்த பிஷ்னய் பழங்குடியினரும் மரங்களை பாதுகாக்க தங்களது உயிரை தியாகம் செய்தனர். 

Kamarajar: கல்வி தந்தை காமராஜரின் 120வது பிறந்தநாள்... ஏழைகளின் கல்வி வளர்ச்சிக்கு கர்மவீரர் ஆற்றிய சேவை...

ஜோத்பூர் மகாராஜா அபய் சிங் அரண்மனை கட்டினார். இதற்காக மரங்களை வெட்டிக் கொண்டு வருவதற்கு உத்தரவிட்டு இருந்தார். இதை அம்ரிதா தேவி தடுத்தார். மரத்தை அணைத்துக் கொண்டார். மரத்தை வெட்டிய பணியாட்கள் இவரது தலையை வெட்டினர். உடன் இருந்த அவரது மூன்று மகள்களும் மரத்தை கட்டி அணைத்தனர். அவர்களும் வெட்டப்பட்டனர். தகவல் அறிந்து வந்த ஊர் மக்கள் மரங்களை கட்டிப்பிடித்தனர். இப்படி மொத்தம் 363 வெட்டி சாய்க்கப்பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. இதையடுத்து, அரசர் தனது தவறை உணர்ந்து மரங்களை வெட்டுவதற்கும், வேட்டையாடுவதற்கும் தடை விதித்தார். 

சுந்தர்லால் பகுகுணா


மரங்களை பாதுகாக்க முன்னுரிமை அளித்தவர் சுந்தர்லால் பகுகுணா. காந்தியவாதி. உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தவர். இமயமலைப் பகுதியில் காடுகளைப் பாதுகாக்க சிப்கோ இயக்கத்தை துவக்கினார். இவரது போராட்டத்துக்கு பெண்கள் துணையாக இருந்தனர். நடைபயணம் சென்று மக்களுக்கு எடுத்துரைத்தார். பாகீரதி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கும், டெகரியில் சுரங்கம் தோண்டவும் எதிர்ப்பு தெரிவித்தார். 2004ஆம் ஆண்டில் பகுகுணாவிற்கு பத்மபூஷன் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. 

அருந்ததி ராய்


புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் அருந்ததி ராய். எழுத்தாளர், அரசியல் ஆர்வலர், மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். ஷில்லாங்கில் பிறந்தார். பின்னர் கேரளத்தில் வளர்ந்தவர். இவர் எழுதிய `தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ நாவலுக்கு 1997ஆம் ஆண்டு புக்கர் பரிசு கிடைத்தது. 

மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைபுக்கு ஆதரவு அளித்தவர். தனது புத்தகத்திற்கு கிடைத்த ராயல்டி தொகையை இந்த அமைப்புக்கு  வழங்கினார். நர்மதை ஆற்றின் குறுக்கே சரோவர் அணை கட்டுவது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதி  எழுதினார். நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி ஒரு நாள் சிறையில் வைக்கப்பட்டார். 

Muthulakshmi: தமிழக்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி- இவரை பற்றிய சில வியக்க வைக்கும் உண்மைகள்

click me!