சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 19,406 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 49 பேர் பலி

Published : Aug 06, 2022, 10:28 AM IST
சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 19,406 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 49 பேர் பலி

சுருக்கம்

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்19,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 49 பேர் உயிரிழந்துள்ளனர்  

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,406 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம்19,893 ஆகவும் நேற்று 20,551 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 19,406 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,41,26,994 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:அதிகரிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 20,551 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 70 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 19,928 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,34,65,552 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,34,793 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:அதிகரிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 19,893 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 53 பேர் பலி..

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,649  ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.19 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 % ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 205.92 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 32,73,551 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!