உத்தரப்பிரதேசத்தில் தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான் உருவாகியுள்ள புதிய வகை மாம்பழங்களுக்கு பிரபலங்களின் பெயரை வைத்து அசத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான் உருவாகியுள்ள புதிய வகை மாம்பழங்களுக்கு பிரபலங்களின் பெயரை வைத்து அசத்தியுள்ளார். மாம்பழ உற்பத்தியாளரான ஹாஜி கலிமுல்லா கான் தனித்துவமான கலப்பினங்களை உற்பத்தி செய்து வருகிறார். 82 வயதான அவர் முலாயம் ஆம், நமோ ஆம், சச்சின் ஆம், கலாம் ஆம், அமிதாப் ஆம், யோகி ஆம், உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட தனித்துவமான மாம்பழங்களை பயிரிட்டுள்ளார். தோட்டக்கலைத் துறை மற்றும் மாம்பழ வகைகளைப் பாதுகாத்தல் மற்றும் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அவரது பங்களிப்பைப் பாராட்டி 2008ல் கானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் மாம்பழ மனிதர் ஹாஜி கலிமுல்லா கான் ஐஸ்வர்யா மற்றும் சச்சின் உள்ளிட்ட தனித்துவமான மாம்பழங்களை உலகிற்கு வழங்கினார். அந்த வரிசையில் தற்போது பழங்களின் ராஜா என்ற இரண்டு சுவையான புதிய கலப்பினங்களை உருவாக்கி அவற்றிற்கு பிரபலங்களின் பெயரை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: வளைந்து நெளிந்து சாகசம் செய்யும் இளைஞன்.. நிலை தடுமாறி தலைக்குப்புற விழுந்த சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே
undefined
இந்த முறை ஹாஜி கலிமுல்லா கான் இரண்டு புதிய வகைகளுக்கு சுஷ்மிதா ஆம் மற்றும் அமித் ஷா ஆம் என்று பெயரிட்டார். ஆம் என்றால் ஹிந்தியில் மாம்பழம் என்று அர்த்தம். அழகான மற்றும் வளைந்து நெலிந்துள்ள சுஷ்மிதா ஆம் மாம்பழம் பாலிவுட் நட்சத்திரம் மற்றும் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் போல நல்ல தோற்றம், இரண்டு வளர்ப்பு மகள்களுடன் அழகாக இருப்பது போல உருவாக்கப்பட்டது. இதுக்குறித்து ஹாஜி கலிமுல்லா கான் கூறுகையில், இந்திய நடிகை ஐஸ்வர்யா ராயின் நினைவாக முதலில் ஐஸ்வர்யா ஆம் என்று பெயரிடப்பட்டது.
இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டம்(CAA) டிசம்பரில் நடைமுறைக்கு வரலாம்: மே.வங்க பாஜக எம்எல்ஏ கணிப்பு
இருப்பினும், நான் சுஷ்மிதா சென் பற்றி மிகவும் பிற்காலத்தில் ஒருவரிடம் பேசினேன். மக்கள் அவரை அழகுக்காக மட்டுமல்லாமல் அன்பான நபராக இருந்ததற்காகவும் அவரை நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால்தான் இந்த முறை இந்த மாம்பழ வகையை உருவாக்கி, அதற்கு சுஷ்மிதா என்று பெயர் வைத்தேன் என்று தெரிவித்தார். இதேபோல் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் நினைவாக அமித் ஷா ஆம் என்று பெயரிடப்பட்டது. இதுக்குறித்து கான் கூறுகையில், இந்த வகை மாம்பழம் ருசியாக இருந்தாலும், இந்த கலப்பினமானது அதன் பெயரைபோல் சக்திவாய்ந்த ஆளுமையுடன் பொருந்துவதற்கு அளவு மற்றும் சுவையில் இன்னும் முன்னேற்றம் தேவை. நான் நிறைய முயற்சி செய்தேன், விரைவில் மாம்பழம் அனைவருக்கும் கிடைக்கும். இப்போது அதன் சுவை நன்றாக இருக்க வேண்டும். அது உண்மையில் அமித் ஷா என்று மக்கள் உடனடியாகச் சொல்லுகிறார்கள் என்று கூறினார்.