Mukesh ambani Assets: ஒவ்வொரு நாளும் ரூ.3 கோடி செலவு பண்ணாலும் அம்பானியின் சொத்து காலியாக இத்தனை வருசம் ஆகுமா?

Published : Jul 13, 2024, 11:05 AM ISTUpdated : Jul 13, 2024, 02:20 PM IST
Mukesh ambani Assets: ஒவ்வொரு நாளும் ரூ.3 கோடி செலவு பண்ணாலும் அம்பானியின் சொத்து காலியாக இத்தனை வருசம் ஆகுமா?

சுருக்கம்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், திருமண செலவு விரவங்கள் பேசுபொருளாகி உள்ளன.

ஆசியாவின் மிகப்பெரியா பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மும்பை மாநகரில் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. திருமண விழாவை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என விஐபி பட்டாளம் மும்பையில் முகாமிட்டுள்ளது. இதனால் மும்பை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆரம்பம் முதலே அம்பானி வீட்டு திருமண விழா ஏழை, நடுத்தர மக்களிடையே பேசுபொருளாக இருந்து வருகிறது. இதனிடையே ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

“இளமை திரும்புதே புரியாத புதிராச்சே” அம்பானி இல்ல திருமண விழாவில் நடனமாடி அசத்திய சூப்பர் ஸ்டார்

இந்நிலையில், உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 10.25 லட்சம் கோடியாகும். இதில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக செலவழிக்கப்படும் தொகை என்பது மொத்த மதிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே என்று சொல்லப்படுகிறது. பொதுவாக இந்தியாவில் ஒரு சராசரி குடும்பத்தில் திமணத்திற்காக அவர்களது மொத்த சொத்து மதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை செலவழிக்கப்படும் நிலையில் ஆனந்த அம்பானியின் திருமண செலவானது மிகவும் குறைந்த விகிதத்திலேயே செலவிடப்படுவதாக சொல்லப்படுகிறது.

Suriya & Joe : ஆனந்த் ராதிகா திருமணம்.. ஜோடியாக வந்து வாழ்த்திய சூர்யா & ஜோ - கூலான வெட்டிங் கிளிக்ஸ் இதோ!

முகேஷ் அம்பானி ஒவ்வொரு நாளும் எந்த வேலையும் செய்யாமல் தன்னிடம் உள்ள பணத்தில் ரூ.3 கோடி அளவிற்கு செலவு செய்யும் பட்சத்தில் அவரது மொத்த சொத்தையும் செலவழிக்க சுமார் 932 ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது அம்பானியின் 12 தலைமுறைகள் எந்த வேலையும் செய்யாமல் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி செலவு செய்யும் பணம் இப்போது அவர்களிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
மோடி அழுத்தத்திற்கு அடிபணியும் தலைவர் அல்ல, இந்தியா வளர்ந்து வரும் சக்தி - புதின் புகழாரம்