ஜூன் 25.. 1975ம் ஆண்டு.. அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாள் - இனி 'சம்விதான் ஹத்யா திவாஸ்' என்று அழைக்கப்படும்!

By Ansgar RFirst Published Jul 12, 2024, 5:28 PM IST
Highlights

Samvidhaan Hatya Diwas : இனி ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 25ம் தேதியை 'சம்விதன் ஹத்யா திவாஸ்' என்று கொண்டாட இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆண்டு 1975.. அன்று இந்தியாவை ஆட்சி செய்த (இந்திரா காந்தி) பிரதமரால் 'அவசரநிலை' பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட மனிதாபிமானமற்ற வலியால், பாதிக்கப்பட்ட அனைவரின் பங்களிப்பையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதியை 'சம்விதான் ஹத்யா திவாஸ்' என்று கொண்டாட பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்துள்ளது. 

மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு அதை அவர் குறிப்பிட்டுள்ளார். "1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனநிலையைக் வெளிக்காட்டி, நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது".

Latest Videos

மத்திய ஆயுதப்படையில் கான்ஸ்டபிள் பணி.. முன்னாள் அக்னி வீரர்களுக்கு சிறப்பு சலுகை - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஆகவே “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ஆம் தேதியை ‘சம்விதன் ஹத்யா திவாஸ்’ என்று கொண்டாட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 1975 ஆம் ஆண்டின் அவசரநிலையின்போது மனிதாபிமானமற்ற வலியை அனுபவித்த அனைத்து மக்களின் மகத்தான பங்களிப்பை இந்த நாள் நமக்கு நினைவூட்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

இந்திரா காந்தியின் அரசாங்கம் ஜூன் 25, 1975 அன்று இந்தியாவில் அவசரகால நிலையை அறிவித்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 21, 1977ல் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஜூன் 25, 2024ம் தேதி, அந்த அவசரநிலை நிறைவடைந்து 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. கடந்த ஜூன் 24 அன்று, புதிய மக்களவையின் முதல் அமர்வின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் ஜனநாயகத்தில் இது ஒரு "கருப்பு புள்ளி" என்று கோடிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விமர்சித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இது ஒரு "தலைப்பு செய்திகளில் இடம்பெற செய்யும் வேலை" என்று கூறினார். பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்களை "முறையான தாக்குதலுக்கு" உட்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்... உச்சநீதிமன்றம் அதிரடி

click me!