சட்டவிரோத செக்போஸ்ட்டை ஒழித்த ம.பி. அரசு! போக்குவரத்து காங்கிரஸ் பாராட்டு!!

By SG Balan  |  First Published Jul 11, 2024, 10:04 PM IST

ஏஐஎம்டிசி குழுத் தலைவர் பால் மல்கித் சிங் கூறுகையில், “செக்போஸ்ட்களை மூடும் ம.பி. முதல்வர் மோகன் யாதவின் முடிவை அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) வரவேற்கிறது” என்றார்.


மத்தியப் பிரதேச மாநில அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத சோதனைச் சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்பு மிக்க சாதனை என அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) கூறியுள்ளது.

அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து காங்கிரஸின் 216வது செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் ஜூலை 9ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, மத்தியப் பிரதேசத்தில் வெளிப்படையான மற்றும் தூய்மையான நிர்வாகத்தை செயல்படுத்த முதல்வர் மோகன் யாதவ் அளித்த முக்கியத்துவத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒத்துழைப்புக்கும் ஏஐஎம்டிசி கமிட்டி நன்றி தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

வாக்குறுதி நிறைவேற்றம்:

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) தலைவர் அம்ரித்லால் மதன், தலைவர் டாக்டர் ஜி.ஆர். சண்முகப்பா மற்றும் கோர் கமிட்டி தலைவர் பால் மல்கித் சிங் ஆகியோர் மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 2024க்குள் சட்டவிரோத சோதனைச் சாவடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக முதல்வர் மோகன் யாதவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

அதில், மோகன் யாதவ் தலைமையிலான ம.பி. அரசு வெளிப்படையான நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது என்று பாராட்டப்பட்டுள்ளது. ஏஐஎம்டிசி குழுத் தலைவர் பால் மல்கித் சிங் கூறுகையில், “செக்போஸ்ட்களை மூடும் ம.பி. முதல்வர் மோகன் யாதவின் முடிவை அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) வரவேற்கிறது” என்றார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும், மத்தியப் பிரதேசத்தைப் போல் மற்ற மாநில முதல்வர்களும் இதைச் செய்ய வேண்டும் என்றும் ஏஐஎம்டிசி கோரிக்கை வைத்துள்ளது.

வெளிப்படையான நிர்வாகம்:

மத்தியப் பிரதேசத்தில் சோதனைச் சாவடிகளை மூடும் முதல்வர் மோகன் யாதவின் முடிவு ஒரு மைல் கல்லாக அமையும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர். மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் திறமையான தலைமையின் கீழ், மாநிலத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறையில் ஊழலைக் குறைக்க இந்த நடவடிக்கை முக்கியமானது என்றும் கூறியுள்ளனர்.

இந்த நடவடிக்கை நல்ல நிர்வாகச் சூழலை உருவாக்கும் என்றும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் என்றும், மாநிலத்தின் பிம்பத்தை உயர்த்தும் என்றும் போக்குவரத்துத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஊழலற்ற இந்தியா:

ஊழலற்ற இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வணிகம் செய்வதை எளிதாக்கும் எனவும் தடையற்ற சரக்குப் போக்குவரத்தை உறுதி செய்து தளவாடச் செலவினம் குறைய வழிவகுக்கும் என்றும் ஏஐஎம்டிசி கருதுகிறது.

அகில இந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்து காங்கிரஸ்:

அகில இந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்து காங்கிரஸ் (AIMTC) இந்திய போக்குவரத்து துறையினரின் மிகப்பெரிய அமைப்பு. அரசியல் சாராத, மதச்சார்பற்ற, லாப நோக்கற்ற இந்த அமைப்பு 1936 முதல் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு 95 லட்சம் டிரக் டிரைவர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்கள், கிட்டத்தட்ட 50 லட்சம் பேருந்து ஊழியர்கள், டாக்ஸி, மற்றும் மேக்சி கேப் ஆபரேட்டர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோரை உள்ளிடக்கியது.

இந்தியா முழுவதும் உள்ள 3,500க்கும் மேற்பட்ட தாலுகா, மாவட்ட, மாநில அளவிலான போக்குவரத்து தொழிற்சங்கங்களின் குரலாக ஏஐஎம்டிசி உள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 20 கோடி பொதுமக்களை இணைக்கிறது.

click me!