Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்... உச்சநீதிமன்றம் அதிரடி

By Ajmal Khan  |  First Published Jul 12, 2024, 11:13 AM IST

மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுபான கொள்கை வழக்கில் டெல்லி அமைச்சர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. மக்களவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது பிரமக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் கேட்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றமும் வழங்கப்பட்டது. ஜாமீன் முடிவடைந்து கடந்த மாதம் ஜூன் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.

இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜாமின் வழங்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனால் ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Latest Videos

click me!