இந்திய விமானப்படையின் MiG-21 போர் விமானம் நேற்று இரவு ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர்.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. குப்பைகள் நிறைந்த பகுதியில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் தீ மளமளவென சுற்றி பரவியது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த விபத்து குறித்து வெளியான அறிக்கையில், 'இந்திய விமானப் படையின் இரட்டை இருக்கைகள் கொண்ட மிக்-21 என்ற பயிற்சி விமானம் இன்று மாலை ராஜஸ்தானிலுள்ள உட்லாய் விமான தளத்திலிருந்து பயிற்சிக்காகப் பறந்து சென்றது. பின்னர் திடீரென இரவு 9:10 மணியளவில், பார்மர் அருகே எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. அதில் விமானிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உயிரிழப்புக்கு இந்திய விமானப் படை வருந்துகிறது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !
மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும்' என்று இந்திய விமானப் படை கூறியிருக்கிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் பயன்பாட்டுக்கு வந்தது மிக்-21 ரக விமானம். சோவியத் காலத்தின் ஒற்றை-இயந்திர மல்டிரோல் போர்,தரை தாக்குதல் விமானமாகும், ஒரு காலத்தில் விமானப் படையின் முதுகெலும்பாக இருந்தது.
இந்த விமானம் பழமையானதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டிய ஒன்று என்று விமானப்படை தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சோவியத் ரஷ்யா காலத்து விமானமான இந்த மிக் ரக விமான பயன்பாட்டை விரைவில் நிறுத்தி நவீன ரக விமான பயன்பாட்டிற்கு மாற இந்திய விமானப் படை தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 20 மாதங்களில் 6 மிக் 21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் ஐந்து விமானிகள் உயிரிழந்துள்ளனர். MiG-21 கள் நீண்ட காலத்திற்கு முன்பே ஓய்வு பெறுவதாக இருந்தது, ஆனால் LCA தேஜாஸ் விமானத்தை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் IAF இந்த விமானங்களை தொடர்ந்து பறக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. இந்திய போர் விமானத்தின் முதல் பெண் ஓட்டுநர் அவனி சதுர்வேதி ஒட்டிய விமானம் இந்த வகை விமானம் தான்.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் விமானப் படை அத்துமீற முயன்றது. அப்போது வானில் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை MiG-21 மூலம் விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இந்தச் சண்டையில் MiG-21 போர் விமானமும் வீழ்த்தப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பாக குதித்த அபிநந்தன், இந்தியாவின் முயற்சியால் நாடு திரும்பினார் என்றும் நினைவுகூறத்தக்கது. 'ஸ்ரீநகர் விமானத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட எண் 51 படைப்பிரிவில் உள்ள இந்த விமானங்களில் சில செப்டம்பர் 30 ஆம் தேதி நிறுத்தப்பட உள்ளது. இதற்குப் பிறகு, மூன்று படைப்பிரிவுகள் மட்டுமே இந்த விமானம் சேவையில் விடப்பட்டு படிப்படியாக அவையும் 2025 ஆம் ஆண்டிற்குள் வெளியேறும்' என்றும் விமானப்படை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !