MiG-21: இந்திய போர் விமானம் வெடித்து சிதறியது..2 வீரர்கள் வீரமரணம்.. விபத்திற்கான காரணம் என்ன..?

By Ajmal Khan  |  First Published Jul 29, 2022, 3:02 PM IST

இந்திய விமானப்படையில்  மிக்-21 போர் விமானம் விபத்தில் சிக்கியதில் இரண்டு வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


மிக் போர் விமானம் விபத்து

இந்திய விமானப்படையில் மிக் 21 போர் விமானம் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானத்தின் மூலம் எல்லை பாதுகாப்பு பணியிலும் , எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிப்பதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தநிலையில், மிக் ரக விமானம் நேற்று இரவு விபத்தில் சிக்கிய சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ராஜஸ்தானிலுள்ள பார்மர் மாவட்டத்தின், படூ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிம்டா கிராமத்தின் புறநகர் பகுதியில் விபத்து நடைபெற்றுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் போர் விமானம், நேற்றைய தினம்  {ஜூலை 28ஆம் தேதி} இரவு ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தகவலை உறுதி செய்தார். இந்த சம்பவம் குறித்து விமானாப்படை சார்பாக வெளியான அறிக்கையில், ``இந்திய விமானப் படையின் இரட்டை இருக்கைகள் கொண்ட மிக்-21 என்ற பயிற்சி விமானம் ராஜஸ்தானிலுள்ள உட்லாய் விமான தளத்திலிருந்து பயிற்சிக்காகப் பறந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

மக்களே உஷார் !! இன்று கனமழை.. 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை.. வானிலை அப்டேட்..

இரண்டு வீரர்கள் பலியான சோகம்
 
அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில்  விங் கமாண்டர் எம் ராணா மற்றும் ஃப்ளைட் லெப்டினன்ட் அத்விதியா பால் ஆகிய இரு விமானிகள் விமான விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு விமானப்படை உறுதுனையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தையடுத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,விமானப்படை தளபதி வி ஆர் சவுதாரியுடன் தொலைபேசியில் பேசினார். இதனையடுத்து டுவிட்டர் பதிவிட்ட ராஜ்நாத் சிங்,  விமான விபத்தில் இரண்டு இந்திய வீரர்களை இழந்ததால் வேதனை அடைவதாக தெரிவித்துள்ளார். நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய சேவை என்றும் மறவாமல் நிலைத்திருக்கும் என கூறியுள்ளார். இந்தியாவில் மிக் ரக விமானங்களில் விபத்துக்கள் ஏற்படுவது அதிக அளவில் நடைபெற்று வருகிறது.  கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவத்தையடுத்து மிக் ரக விமானத்திற்கு விடை கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுற்றி திமுக சீனியர்ஸ்... மோடியை கும்பிட்டு சிங்கிளா நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி..

click me!