குஜராத் மோர்பி பாலம் விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
குஜராத் - மோர்பி:
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த விபத்து நிகழ்ந்த தருணத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
பாலத்தில் மக்கள் கயிறு கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்கும் வேளையில், திடீரென்று கயிறுகள் அறுந்து பாலம் கவிழந்தது. இதில் நொடிப் பொழுதில் பாலத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் ஆற்றில் விழுந்து மூழ்கினர்.
துயர சம்பவம்:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலத்தை இன்றளவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தை புணரமைக்கும் பணியில் குஜராத் அரசு ஈடுபட்டு, 5 நாள்களுக்கு முன்னர் தான் மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது.நேற்று வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக மக்கள் இந்த பாலத்தில் பயணிக்க வந்துள்ளனர்.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
அறுந்து விழுந்த பாலம்:
நேற்று மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக பாலத்தின் கேபிள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.சுமார் 100 பேரை மட்டுமே தாங்கும் இந்த பாலத்தில் சம்பவத்தின் போது 500 பேர் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இதன் புனரமைப்பு ஒப்பந்த நிறுவனமான ஒரேரா என்ற தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
மோர்பி வரலாறு:
143 ஆண்டுகளுக்கு முன்பாக மோர்பியை ஆண்ட சர் வாகிஜி தாகூர் என்பவரால் இந்த தொங்கும் பாலம் கட்டப்பட்டது. நவீன ஐரோப்பிய கட்டிடக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த சர் வாகிஜி தாகூர், அதே பாணியிலான பாலத்தை கட்டி எழுப்பினார்.தர்பார்கத் அரண்மனை மற்றும் நாஸர்பாக் அரண்மனை ஆகியவற்றுக்கு இடையில் கட்டி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க..நவம்பர் 6ம் தேதி.! ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி - தமிழக காவல்துறை உத்தரவு
பொறியியலின் அதிசயம்:
தற்போது தர்பார்கத் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரிக்கு இடையில் அமைந்துள்ளது. இதனை பொறியியலின் அதிசயம் என்று கூறுவோரும் உண்டு. இதற்கான கட்டுமான செலவு அந்த காலகட்டத்திலேயே 3.5 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இது 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி முதன்முதலில் திறந்து வைக்கப்பட்டது.
குஜராத் நிலநடுக்கம்:
இதனை அப்போதைய மும்பை ஆளுநர் ரிச்சர்ட் டெம்பிள் திறந்து வைத்தார். 233 மீட்டர் நீளமும், 1.25 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலம், முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வந்துள்ளது. 2001ல் நிகழ்ந்த குஜராத் நிலநடுக்கத்தின் போது பாலம் பலத்த சேதமடைந்தது.
அதன்பிறகு சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது இந்தப் பாலம் ஒரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் 15 ஆண்டுகள் பராமரிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!