இரு சிறுவர்களை கட்டி வைத்து சித்ரவதை… 3 பேர் கைது… இணையத்தில் வீடியோ வைரல்!!

Published : Oct 31, 2022, 05:05 PM IST
இரு சிறுவர்களை கட்டி வைத்து சித்ரவதை… 3 பேர் கைது… இணையத்தில் வீடியோ வைரல்!!

சுருக்கம்

இந்தூரில் தங்களது காரில் இருந்து பொருட்களை திருடியதாக கூறி இரு சிறுவர்களை வாகனத்தில் ஏற்றி இழுத்துச் சென்ற 3 சந்தேக நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்தூரில் தங்களது காரில் இருந்து பொருட்களை திருடியதாக கூறி இரு சிறுவர்களை வாகனத்தில் ஏற்றி இழுத்துச் சென்ற 3 சந்தேக நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் பணத்தைத் திருடியதாகக் கூறி மர்ம நபர்கள் இரண்டு சிறுவர்களை அடித்து இழுத்துச் சென்று வாகனத்தில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதை அடுத்து அந்த மூன்று பேரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்தனர். இதுக்குறித்து ராஜேந்திர நகர் காவல் நிலைய பொறுப்பாளர் அஜய் குமார் மிஸ்ரா கூறுகையில், வாகனத்தில் இருந்து பணத்தை திருடியதாக 13 முதல் 17 வயதுடைய இரு சிறுவர்களை சித்திரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பகத் சிங் வேடமணிந்து வீட்டில் ஒத்திகை.. கயிறு இறுக்கி சிறுவன் பலி.. நெஞ்சில் அடித்து கொண்டு கதறிய தாய்.!

முக்கிய குற்றவாளியான கந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி, சம்பவத்தில் இருந்து தலைமறைவாக உள்ளார். வியாபாரியின் வீடு பூட்டப்பட்டுள்ளது மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் காணவில்லை. நாங்கள் அவரைத் தேடி வருகிறோம் என்று தெரிவித்தார். மற்றொரு போலீஸ் அதிகாரி கூறுகையில், வியாபாரி இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் ஹோல்கர் பழம் காய்கறி சந்தைக்கு சனிக்கிழமை சிறிய சரக்கு வாகனத்தில் வெங்காய சாக்குகளை எடுத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: இனி பாலியல் வழக்குகளில் இரு விரல் சோதனை நடத்த தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி..!

வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடியதாக சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றார். மேலும் இதுக்குறித்து வெளியான வீடியோவில், சிறுவர்களை வாகனத்தில் கயிற்றில் கட்டி வைத்து, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி திருடப்பட்ட பணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த காணொளியில் வாகனம் திடீரென ஸ்டார்ட் செய்வதும், சிறுவர்கள் தரையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்படுவதும் பதிவாகியுள்ளது. அப்போது அங்கிருந்த சிலர் கூச்சலிட்டு வாகனத்தை நிறுத்தியதை காணலாம். 

PREV
click me!

Recommended Stories

IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!