இனி பாலியல் வழக்குகளில் இரு விரல் சோதனை நடத்த தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumar  |  First Published Oct 31, 2022, 1:21 PM IST

இருவிரல் பரிசோதனை என்பது பெண்ணின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது. பெண்ணின் கருப்பை வாய்ப் பகுதியை மருத்துவர்கள் கையைக் கொண்டு ஆராய்வர். அதன்முடிவில் கன்னித்திரை கிழிந்திருப்பதை வைத்து அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு விரல் சோதனை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இருவிரல் பரிசோதனை என்பது பெண்ணின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது. பெண்ணின் கருப்பை வாய்ப் பகுதியை மருத்துவர்கள் கையைக் கொண்டு ஆராய்வர். அதன்முடிவில் கன்னித்திரை கிழிந்திருப்பதை வைத்து அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.

Latest Videos

இதையும் படிங்க;- TB TEST: இந்தியாவில் அதிகரிக்கும் காசநோய் பாதிப்பு! 2021ம் ஆண்டில் 18% அதிகரிப்பு

இந்நிலையில், இது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் பாதிப்புக்குள்ளான நபருக்கு இரு விரல் சோதனை நடத்தக் கூடாது. இந்த நடைமுறை இன்றும் நடைமுறையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது. இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இருந்து இருவிரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க;-  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்..? வெளியான முக்கிய தகவல்..

click me!