தேசிய ஒற்றுமை தினம்: சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

By Ajmal KhanFirst Published Oct 31, 2022, 9:56 AM IST
Highlights

சர்தார் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ராஷ்ட்ரீய ஏக்தா திவாஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கெவாடியாவில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்

தேசிய ஒற்றுமை தினம்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத்தின் கேடா மாவட்டத்தில் நாடியாத் கிராமத்தில் 1875, அக், 31ல் விவசாய குடும்பத்தில் படேல் பிறந்தார்.சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். 1950, டிச. 15ல் காலமானார். மறைவுக்குப்பின் 1991ல் நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது. பிரதமரின் “ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்” என்ற தொலைநோக்கு பார்வையால் ஒவ்வொரு ஆண்டும் சர்தார் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ராஷ்ட்ரீய ஏக்தா திவாஸ் என்று கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதாவது அவரது 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒற்றுமை சிலை! ‘ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி !!

பிரதமர் மோடி மரியாதை

இந்தநிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

Rashtriya Ekta Diwas is a tribute to the invaluable role of Sardar Patel in unifying our nation. https://t.co/mk4k21xpme

— Narendra Modi (@narendramodi)

 

இந்த நிலையில், படேலின் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கெவாடியாவில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். கெவாடியாவில் நடைபெற்று வரும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். 

போர் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை

முன்னதாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வதோதரா நகரத்தில் இந்திய விமானப்படைக்கு தேவையான 'சி-295' ரக போர் விமானங்களை  தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.21 ஆயிரத்து 935 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார்

இதையும் படியுங்கள்

சர்தார் வல்லபாய் படேல் "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படுவது ஏன்?

click me!