பகத் சிங் வேடமணிந்து வீட்டில் ஒத்திகை.. கயிறு இறுக்கி சிறுவன் பலி.. நெஞ்சில் அடித்து கொண்டு கதறிய தாய்.!

Published : Oct 31, 2022, 02:13 PM IST
பகத் சிங் வேடமணிந்து வீட்டில் ஒத்திகை.. கயிறு இறுக்கி சிறுவன் பலி.. நெஞ்சில் அடித்து கொண்டு கதறிய தாய்.!

சுருக்கம்

பள்ளியில் நடந்த ஒத்திகையை போன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பகத் சிங்கை தூக்கிலிடும் காட்சியை ஒத்திகை பார்க்கும் போது எதிர்பாராத விதமாக தூக்கு கயிற்றில் சிக்கிக்கொண்டு சஞ்சய் கௌடா உயிரிழந்துள்ளார். 

கர்நாடகாவில் பகத் சிங் போல் வேடமணிந்து ஒத்திகையில் ஈடுபட்ட சிறுவன் தூக்கு கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக குடியரசுத் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது பள்ளிகளில் சிறப்பு நாடகங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சஞ்சய் கௌடா 7ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக சஞ்சய் கௌடா பகத் சிங் வேடத்தில் நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 

இந்த நாடகம் எதற்காக என்றால் வரும் நவம்பர் ஒன்று கர்நாடக உதயமான தினம். அந்த உதயமான தினத்தை முன்னிட்டு பள்ளியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாகவே இதுகுறித்த ஒத்திகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. பள்ளியில் நடந்த ஒத்திகையை போன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பகத் சிங்கை தூக்கிலிடும் காட்சியை ஒத்திகை பார்க்கும் போது எதிர்பாராத விதமாக தூக்கு கயிற்றில் சிக்கிக்கொண்டு சஞ்சய் கௌடா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, வெளியே சென்ற பெற்றோர் வீட்டில் வந்து பார்த்த போது மகன் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒத்திகையின் போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!