Gujarat Elections 2022: குஜராத் தேர்தல்: 12 அதிருப்தியாளர்கள் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்: பாஜக அதிரடி

By Pothy RajFirst Published Nov 23, 2022, 3:00 PM IST
Highlights

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் 12 அதிருப்தியாளர்களை  கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து பாஜக உத்தரவிட்டுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் 12 அதிருப்தியாளர்களை  கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து பாஜக உத்தரவிட்டுள்ளது.

சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் அதிருப்தியாளர்கள், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்கள். அவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சமாளிக்குமா பாஜக! தெற்கு குஜராத்தில் சவாலாகிய ஆம் ஆத்மி, பழங்குடியினர்: ஓர் அலசல்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது, 8ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்தத் தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. 

20ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பாஜக, ஆட்சி அதிகாரத்தை ஆம்ஆத்மி, காங்கிரஸிடம் இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து பாஜகவுக்கு அடுக்கடுக்கான பிரச்சினைகள் வந்தன. கட்சியில் ஏற்கெனவே வாய்ப்பு பெற்றவர்கள் பலருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

குஜராத் தேர்தலில் வாரிசு அரசியல்!வெற்று வார்த்தை பாஜக, மாறாத காங்கிரஸ்:20 பேர் போட்டி

அதேநேரம், காங்கிரஸ்கட்சியிலிருந்து விலகி வந்து பாஜகவில் சேர்ந்த  பலருக்கும் இந்த முறை தேர்தலில் சீட் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக ஆதரவாளர்கள், விசுவாசிகள், கடுமையாக கட்சியை விமர்சித்தனர்.

சில அதிருப்தியாளர்கள், பாஜக மேலிடம்  அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராகவே தாங்களும் அதே தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனுத்தாக்கல் செ்யது தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதிருப்தியாளர்களை அழைத்து மாநில பாஜக தலைமை பலமுறை சமாதானப் பேச்சு நடத்திவிட்டது ஆனால், அதிருப்தியாளர்கள் சமாதானம் அடையவில்லை.

இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட அதிருப்தியாளர்கள் 12 பேரே 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து பாஜக மேலிடம் உத்தரவிட்டது. கடந்த ஞாயின்று 7 அதிருப்தியாளர்களை பாஜக மேலிடம் சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்த நடவடிக்கையின் மூலம் பாஜகவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வர துடிக்கிறார்கள்: ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு

பாஜக மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் கூறுகையில் “ கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அதிருப்தியாளர்கள் 12 பேர் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தினுபாய் படேல், மதுபாய் ஸ்ரீவஸ்தவா, குல்தீப் சின் ராவல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

பி.பாகி, தாவல் சிங் ஜஹலா, ராம் சிங் தாக்கூர் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தவிர மனவிஜ்பாய் தேசாய், எல் தாக்கூர், எஸ்எம் பாந்த், ஜேபி படேல், ரமேஷ் ஜஹலா, அம்ரிஷி பாய் ஜஹலா ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்” எனத் தெரிவி்த்தார்

பாஜக இந்த முறை எம்எல்ஏக்களாக இருக்கும் 42 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. குறிப்பாக முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல், கட்சித் தலைவர் சிஆர் பாட்டீல் ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை


 

click me!