Satyendar Jain Jail: சத்தியேந்திர ஜெயின் இருப்பது திஹார் சிறையா? ஹாலிடே ரிசார்ட்டா?: மீனாட்சி லெஹி விளாசல்

By Pothy Raj  |  First Published Nov 23, 2022, 1:29 PM IST

டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயில் ரிசார்ட்டில் அனுபவிக்கும் வசதிகளை திஹார் சிறையில் அனுபவித்து வருகிறார் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி குற்றம்சாட்டியுள்ளார்.


டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயில் ரிசார்ட்டில் அனுபவிக்கும் வசதிகளை திஹார் சிறையில் அனுபவித்து வருகிறார் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி குற்றம்சாட்டியுள்ளார்.

சத்தியேந்திர ஜெயின் சிறையில் வகை,வகையான பழங்கள், உணவுகளை சாப்பிடும் சிசிடிவி காட்சிகள் வெளியானபின், இந்த விமர்சனத்தை மத்தியஅமைச்சர் வைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

டெல்லி நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராகுல் மெஹ்ரா “ கடந்த மே 31ம் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் அமைச்சர் சத்தியேந்திர் ஜெயினுக்கு முறையான உணவுகள் வழங்கப்படவில்லை.

திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ்; வைரல் வீடியோ!!

கடந்த 12 நாட்களாக ஜெயின் மதரீதியாக சத்தியேந்திர ஜெயின் விரதம் இருந்து வருகிறார் அவருக்கு முறையான உணவுகள் வழங்கப்படவில்லை. மருத்துவப் பரிசோதனையும் நடக்கவில்லை. சிறை நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் சத்தியேந்திர ஜெயின் உடல் எடை 28 கிலோ குறைந்துவிட்டது. சிறையில் சிறப்பு சலுகைகள் சத்தியேந்திர ஜெயினுக்கு வழங்கப்படுகிறது என்பது பொய்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், நீதிமன்றத்தில் சத்தியேந்திர ஜெயின் வழக்கறிஞர் கருத்துக்களை வைத்த அடுத்த சில நாட்களில் இன்று ஒரு சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், திஹார் சிறையில் பழங்கள், சாலட், உணவுகள் என் வகைவகையாக சத்யேந்திர ஜெயின் சாப்பிடுவதற்காக வைக்கப்பட்ட வீடியோ வெளியானது. இந்த வீடியோ குறித்து இதுவரை ஆம் ஆத்மி கட்சி சார்பில் எந்த விதமான பதிலும் அளி்க்கவில்லை

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான மீனாட்சி லெகி இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில் “ திஹார் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி அமைச்சருமான சத்தியேந்திர ஜெயினுக்கு ஏற்கெனவே பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி மசாஜ் செய்த வீடியோ வெளியானது.

சத்யேந்தர் ஜெயின் மசாஜ் வீடியோ விவகாரம்... அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!!

இதுபோன்ற குற்றத்தைச் செய்தவர்களை நான் என் அருகே கூடஅனுமதிக்கமாட்டேன். ஆனால், சத்தியேந்திர ஜெயின் காலை அந்த நபர் மசாஜ் செய்கிறார். பலாத்காரக் குற்றவாளிகள் மசாஜ் செய்வது ஆம் ஆத்மி தலைவர்களுக்கு வெட்கமாக இல்லையா, இதை மக்களும்  பார்க்கிறார்கள். 

சிறையில் உள்ள விதிகளின்படி, உணவு மற்றும் மருத்துவ சேவை ஒருவருக்கு அளிக்கலாம். ஆனால், திஹார் சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெயினுக்கு தொலைக்காட்சி, பேக்கிங் செய்யப்பட்டஉணவு, மசாஜ் என வழங்கப்படுகிறது. திஹார் சிறையா அல்லது ஹாலிடோ ரிசார்ட்டா. ரிசாட்டில் அனுபவிக்கும்  வசதிகள் அனைத்தையும் சிறையில் சத்தியேந்திர ஜெயின் அனுபவிக்கிறார். 

சிறையில் பழங்கள், சாலட் சாப்பிடும் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின்!28 கிலோ குறைந்தது பொய்யா?

பதிலாக டெல்லியில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துவிட்டார், தேர்தல் பிரச்சாரம் செய்து ஆம் ஆத்மி கட்சியை விரிவாக்கம் செய்து பிரதமராகும் முயற்சியில் கெஜ்ரிவால் இருக்கிறார். 

இவ்வாறு மீனாட்சி லெகி குற்றம்சாட்டினார்

click me!