காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிராவில் பயணத்தை முடித்து, மத்தியப் பிரதேச மாநிலத்துக்குள் இன்று காலை நுழைந்தது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிராவில் பயணத்தை முடித்து, மத்தியப் பிரதேச மாநிலத்துக்குள் இன்று காலை நுழைந்தது.
ராகுல் காந்தி மத்தியப்பிரதேசத்தின் போதர்லி பகுதிக்குள் நுழைந்தபோது, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்று அவருடன் இணைந்தனர். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், தேசியக் கொடியை, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத்திடம் வழங்கினார். மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி 12 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, 380 கி.மீ தொலைவு நடக்க உள்ளார்.
நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வர துடிக்கிறார்கள்: ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு
மத்தியப் பிரதேசத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ராஜஸ்தானுக்குள் ராகுல் காந்தி செல்ல உள்ளார்.
மத்தியப்பிரதேசத்தின் போதர்லி பகுதி வாழை சாகுபடி அதிகம்.இதனால் ராகுல் காந்தியை வரவேற்க வாழை இழைகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டு அவரை வரவேற்றனர். பாரம்பரிய நடனங்கள், இசை வாத்தியங்கள் மூலம் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் போதர்லி பகுதிக்குள் ராகுல் காந்தி நுழைந்தபின் அளித்த பேட்டியில் “ இந்த நடைபயணம் என்பது நாட்டில் பரவும் வெறுப்புக்கும், வன்முறைக்கும், அச்சத்துக்கும் எதிரானது. கன்னியாகுமரியில் இருந்து தேசியக் கொடியை ஏந்தி இந்த பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கியுள்ளோம்.
ஸ்ரீநகர் சென்று அடையும்வரை இந்த தேசியக் கொடியை யாரும் தடுக்க முடியாது
ஆளும் பாஜக அரசு, இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மனதில் அச்சத்தை பரப்புகிறது, அதை வன்முறையாக மாற்றுகிறது” எனத் தெரிவித்தார்
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணம் 23ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழைகிறது
ராகுல் காந்தியின் யாத்திரையைக் காண வந்திருந்த 5வயது சிறுவன் ருத்ராவை அழைத்த ராகுல் காந்தி, எதிர்காலத்தில் லட்சியம் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன், மருத்துவராக வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதன்பின் ராகுல் காந்திபேசுகையில் “ இப்போதுள்ள சூழலில் ருத்ராவின் கனவை நிறைவேற்ற அவரின் பெற்றோர்கள், கோடிக்கணக்கான தொகையை தனியார் மருத்துவக் கல்லூரிக்கு கொடுத்தால்தான் மருத்துக் கல்வியைப் பெற முடியும். நாட்டில் கல்வி என்பது தனியார்மயமாகிவருவதை ஆபத்தானது. நாட்டில் விமானநிலையங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் 3அல்லது 4 கோடீஸ்வர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன.
குஜராத் தேர்தலில் வாரிசு அரசியல்!வெற்று வார்த்தை பாஜக, மாறாத காங்கிரஸ்:20 பேர் போட்டி
ரயில்வேதுறைகூட கோடீஸ்வரர்கள் வசம் செல்கிறது. இப்போதுள்ள அநீதிக்கான இந்தியா, இதுபோன்ற இந்தியா நமக்கு வேண்டாம். சாமானிய மக்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம், விலை உயர்ந்த பெட்ரோல், சமையல் கேஸ் வாங்க செல்கிறது. அந்த எரிபொருளுக்கான பணம் சில கோடீஸ்வர்களுக்கு செல்கிறது” எனத் தெரிவித்தார்.
மத்தியப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங், எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பச்சோரி, அருண் யாதவ் ஆகியோரும் யாத்திரையில் இணைந்தனர்.