போதையில் மொத்த குடும்பத்தினரையும் குத்திக் கொன்ற கொடூர இளைஞர்; டெல்லியில் மேலும் ஒரு அதிர்ச்சி!!

Published : Nov 23, 2022, 01:04 PM IST
போதையில் மொத்த குடும்பத்தினரையும் குத்திக் கொன்ற கொடூர இளைஞர்; டெல்லியில் மேலும் ஒரு அதிர்ச்சி!!

சுருக்கம்

போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், மறுவாழ்வு மையத்தில் இருந்து திரும்பிய சில நாட்களிலேயே தனது மொத்த குடும்ப உறுப்பினர்களையும் கொன்று குவித்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

போதை வஸ்துகளுக்கு அடிமையான கேசவின் வயது 25. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் போதை வஸ்துகளில் இருந்து மீள்வதற்காக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து திரும்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று, குடும்பத்தினருடன் ஏற்பட்ட  சண்டைக்குப் பின்னர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரை கத்தியால் குத்தி கேசவ் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தென்மேற்கு டெல்லியில் பாலம் என்ற இடத்தில் உள்ள அவர்களது வீட்டில் நேற்றிரவு ரத்தத்துடன் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேசவ் கைது செய்யப்பட்டார். கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி தனது குடும்ப உறுப்பினர்களின் கழுத்தை பிளந்து,  பலமுறை அவர்களை குத்திக் கொன்றதாக அதிர்ச்சி தரும் தகவல்களை போலீசார் பகிர்ந்துள்ளனர்.  

என்னுடைய பொண்ண நாசம் பண்ணி.. கர்ப்பமாகிட்டான்..போலீஸ் ஸ்டேசனில் கதறிய தாய்..!

கேசவின் பாட்டி திவானா தேவி 75, தந்தை தினேஷ் 50, தாய் தர்ஷனா, சகோதரி ஊர்வசி 18 ஆகியோரின் ரத்தம் தோய்ந்த உடல்கள் தனித்தனி அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.  பெற்றோரின் சடலங்கள் குளியலறையிலும், அவரது சகோதரி மற்றும் பாட்டியின் சடலங்கள் மற்ற அறைகளிலும் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 

குர்கானில் வேலை செய்து கொண்டிருந்த கேசவ் கடந்த மாதம் பணியை ராஜினாமா செய்துள்ளார்.  தீபாவளியிலிருந்து வேலையில்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்தான், போதையில் இருக்கும்போது, கொலை செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 10.30 மணியளவில் கேசவ் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதே கட்டிடத்தில் குடியிருக்கும் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வருவதற்குள் தப்பித்து செல்வதற்கு கேசவ் திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்த உறவினர்கள் அவரை மடக்கிப் பிடித்து வீட்டுக்குள் தள்ளியுள்ளனர். போலீசாரும் விரைந்து வந்து கேசவை கைது செய்தனர்.

அந்தரங்க உறுப்பில் பிளேடால் பெயரை எழுத சொல்லி டார்ச்சர்... பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கைது!!

டெல்லி வீட்டில் ஷ்ரத்தா வாக்கரை அவரது நண்பரும், காதலருமான ஆப்தாப் பூனாவாலா கொன்ற சம்பவம் இன்னும் மறையவில்லை. தினமும் இந்தக் கொலையில் புதிய செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது நடந்து இருக்கும் இந்தக் கொலையில் டெல்லி நகரமே அதிர்ச்சியில் உள்ளது.
 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
IndiGo: இனி எந்த விமானமும் தாமதம் இல்லை..! கண்ட்ரோல் ரூமில் நின்று கண்காணிக்கும் மத்திய அமைச்சர்