USCIR:இந்தியாவில் மதரீதியான சுதந்திரம்,மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல்:அமெரிக்க மதசுதந்திர ஆணையம் குற்றச்சாட்டு

By Pothy RajFirst Published Nov 23, 2022, 2:36 PM IST
Highlights

இந்தியாவில் மதரீதியான சுதந்திரம், அது தொடர்பான மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அமெரிக்காவின் சர்வதேச மதசுதந்திர ஆணையம்((USCIRF)  குற்றம்சாட்டியுள்ளது. 

இந்தியாவில் மதரீதியான சுதந்திரம், அது தொடர்பான மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அமெரிக்காவின் சர்வதேச மதசுதந்திர ஆணையம்((USCIRF)  குற்றம்சாட்டியுள்ளது. 
இந்தியாவில் இருக்கும் மதச்சந்திரம் குறித்து மதிப்பீடு செய்து, தனது அறிக்கையை அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச மதசுதந்திர ஆணையம் ஏற்கெனவே இந்தியா மீது இதேபோன்ற குற்றச்சாட்டை வைத்திருந்தது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டு ஒரு தலைப்பட்சமானது, முழுமையாக ஆய்வு செய்யப்படாத, துல்லியமில்லாதது என்று மத்திய அரசு நிராகரித்துவிட்டது. 

Covid Cases in China: கவலையில் சீனா! விடாமல் துரத்தும் கொரோனா !3 வாரத்தில் 2.53 லட்சம் பாதிப்பு

அமெரிக்காவின் சர்வதேச மதசுதந்திர ஆணையம் என்பது அமெரிக்க எம்.பி.க்களால் நியமிக்கப்படும் அமைப்பாகும். இந்த ஆணையம் அளி்க்கும் பரிந்துரைகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயமும் அமெரிக்க அரசுக்கு இல்லை.

2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இதேபோன்ற அறிக்க அமெரிக்க மதச்சுதந்திர ஆணையம் வெளியி்ட்டிருந்தது. அதில், “சர்வதேச மதச் சுதந்திரச் சட்டத்தின்படி, மோசமான மதச் சுதந்திர மீறல்களிலும் அல்லது சகிப்புத்தன்மை குறைவாகவும் இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தது

இந்தியாவை மதச்சுதந்திர விதிமீறல்கள், சமூகத்தினரிடையே பிளவுகளை ஊக்குவிப்பது போன்வற்றில் ஈடுபடாமல் அமெரி்க்கா ஊக்குவிக்க வேண்டும் இந்த இந்த ஆண்டு தொடக்கத்தில் அளித்த பரிந்துரையில் அமெரிக்க மதச்சந்திர ஆணையம் தெரிவித்திருந்தது.  

நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் ஷெர் பகதூர் தூபா வெற்றி! ஆளும் கட்சி முன்னிலை

ஆனால் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், ஒத்துழைக்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறை மறுத்துவிட்டது. இதுவரை 3 முறை, 6 பக்கங்களில் இந்தியா குறித்த தனது பரிந்துரைகளை அமெரிக்க மதச்சுதந்திர ஆணையம் அரசுக்கு வழங்கியுள்ளது.

2022ம் ஆண்டு அளித்த அறிக்கையில் “ இந்தியாவில் மதச்சுதந்திரத்தின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. இந்திய அரசு, மாநிலங்கள், உள்ளூர் நிர்வாகங்கள், மதமாற்றச்சட்டங்கள், பசுவதை சட்டங்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை பாதிக்கும் கொள்களையை ஊக்குவிக்கின்றன.

அரசுக்கு எதிராக எழும்பும் குரல்களை இந்தியா அரசு தொடர்ந்து நசுக்கும் வேலையில் ஈடுபடுகிறது. குறிப்பாக மதரீதியான சிறுபான்மையினர் கண்காணிக்கப்படுகிறார்கள், அவர்கள் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன, துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள், எங்கும் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது,

யுஏபிஏ சட்டத்தில் தடுப்புக் கைதிகளாக வைக்கப்படுகிறார்கள். நிதிப்பங்களிப்புச் சட்டம் மூலம் தொண்டு நிறுவனங்கள் குறிவைக்கப்படுகின்றன. என்ஆர்சி, சிஏஏ போன்ற சட்டங்கள் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் உள்ளன”எ னத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter-ரை தொட்ட கெட்ட!எலான் மஸ்க்கிற்கு தினசரி ரூ.2,500 கோடி இழப்பு! 10,000 கோடி டாலர் நஷ்டம்

ஆனால், இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஜூன் மாதம் மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டஅறி்க்கையில் “ அமெரிக்க மதச்சுதந்திர ஆணையம் இந்தியா குறித்த தெரிவித்த கருத்துக்கள், பரிந்துரைகள், அளித்த அறிக்கை ஒருதலைப்பட்சமானது. இந்தியாவைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாமலும், அரசியலமைப்புச்சட்டத்தை அறியாமலும், ஜனநாயக அம்சங்களை தெரியாமலும் தெரிவித்த கருத்துக்கள் எனத் தெரிகிறது. தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களை அமெரிக்க மதச்சுந்திர ஆணையம் தெரிவிப்பது வருத்தத்திற்குரியது” எனத் தெரிவித்தது

click me!