பாதி சம்பளத்தை ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுங்க: வருண் காந்தி வலியுறுத்தல்

By SG Balan  |  First Published Jun 3, 2023, 6:31 PM IST

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்குமாறு பாஜக எம்.பி. வருண் காந்தி சக எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.


பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்குமாறு தனது சக எம்.பி.க்களிடம் இன்று வலியுறுத்தியுள்ளார். குடும்பங்களுக்கு முதலில் ஆதரவு கிடைக்க வேண்டும், பிறகு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

ஒடிசாவின் பாலசோரில் நடந்த மூன்று ரயில்கள் விபத்து மனதை உலுக்கியதாகக் கூறிய பிலிபிட் தொகுதி பாஜக எம்.பி., வருண் காந்தி, அனைவரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்பது காலத்தின் தேவை என்றார்.

Tap to resize

Latest Videos

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!

இது குறித்து வருண் காந்தி இந்தியில் ட்விட்டர் பதிவு ஒன்றை எழுதியுதுள்ளார்: "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து இதயத்தை உலுக்குகிறது. துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். துக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்குகிறேன். எனது சக எம்.பி.க்கள் அனைவருக்கும் இதையே வேண்டுகோளாக விடுக்கிறேன். அவர்களுக்கு முதலில் ஆதரவு வழங்கப்பட வேண்டும், பின்னர் நீதி வழங்கப்பட வேண்டும்."

ஒடிசாவின் பாலசோரில் வெள்ளிக்கிழமை மாலை மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 288 பேர் கொல்லப்பட்டனர்  சுமார் 900 பேர் காயமடைந்தனர். ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு, அருகிலுள்ள தண்டவாளத்தில் சரக்கு ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டது. பின், ​​பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதி தடம் புரண்டது.

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரையும் பாஜக உதவிக் குழு: அண்ணாமலை தகவல்

उड़ीसा की रेल दुर्घटना हृदय विदारक है!

जो परिवार इस हादसे से टूटे हैं हमें उनके साथ चट्टान की तरह खड़ा होना होगा।

मेरा सभी साथी सांसदों से निवेदन है कि हम सभी अपनी तनख्वाह का एक हिस्सा शोक संतप्त परिजनों के नाम कर उनकी मदद के लिए आगे आयें।

पहले उन्हें सहारा मिले, फिर न्याय।

— Varun Gandhi (@varungandhi80)

இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு  ரூ. 50 ஆயிமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாகவும், இனி தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி அதிபராக 3வது முறை பதவியேற்கும் தையிப் எர்டோகன்; புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?

click me!