From The India Gate: காம்ரேட்களை அலறவிடும் ஆபரேஷன் சக்தியும் கட்சிக்கு அடங்காத தலைவரும்!

By SG Balan  |  First Published Jul 2, 2023, 1:56 PM IST

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 31வது எபிசோட்.


ஆபரேஷன் சக்தி:

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்பு கோட்டையின் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் அதன் முகத்திரையைக் கிழித்துவிட்டது. மூத்த பத்திரிகையாளரும், முன்பு கட்சியின் நாளிதழான தேசாபிமானியின் ஆசிரியர் குழுவில் இருந்த கம்ரேட்டுமான சிபிஎம் தலைவர்களின் ஜி.சக்திதரன் முகமூடியைக் கிழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை சமூக ஊடகங்களில் நினைவுகூர்ந்திருக்கிறார். அவரது பேஸ்புக் போஸ்டில், திருவனந்தபுரத்தில் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் வரை அறியப்பட்டவர் இந்த காம்ரேட் என்று கூறி அதனை விவரிக்கிறது.
2005ஆம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் இருந்து அவர் வசூலித்த பண மூட்டைகளை எண்ணுவதற்கு தான் உதவியதாக சக்திதரன் கூறுகிறார்.

“ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. இதை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் அதை ஒரு பெட் ஷீட்டில் அதை மூட்டை கட்டிக்கொண்டு காரின் வைத்துக்கொண்டு விரைந்தோம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதனால், காம்ரேட்கள் சக்திதரனுக்கு எதிராக மிரட்டல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். சக்தியின் இன்னொரு பதிவு இன்னும் தீவிரமானது.

அமைச்சரவையில் இருந்த காம்ரேட் ஒருவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இருந்து ஒரு பெண் தோழருடன் எப்படி தப்பிக்க நேர்ந்தது என்பதை விவரித்தார். கட்சி தொண்டர்கள் ஹோட்டலை முற்றுகையிட்டதையடுத்து அந்த காம்ரேட் அவசரகால பயன்பாட்டுக்கான பாதை வழியே ஓடி வெளியேறினார் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும், தற்போதைய கேபிசிசி தலைவர் கே.சுதாகரனை அழித்தொழிக்க கட்சி ஒரு காம்பரேட் குரூப்பை களமிறக்கியுள்ளது என்றும் சக்திதரன் கூறுகிறார். இப்போது சிபிஎம்மின் குறியில் முதலிடத்தில் உள்ளவராக சுதாகரன் இருக்கிறார்.

காம்ரேட்டுகள் தன்னை மீண்டும் கொடுமைப்படுத்தினால், தன் செயலைத் தொடர்வேன் என்று சக்திதரன் எச்சரித்துள்ளார். இது காம்ரேட்டுகளுக்கு நிஜமான ரெட் கார்டு தான்.

இப்படிப் பேசினால் மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்? ராகுலை விமர்சிக்கும் வெள்ளை மாளிகை பாடகர் மேரி மில்பென்

ஸ்கோபோபோபியா:

எந்தவொரு அரசியல்வாதியும் ஒரு தவறான கேள்வியில் மாட்டிக்கொண்டால் போதும், ஊடகங்களுடன் தொடர்பைத் துண்டித்துக்கொள்வார்கள்.

கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்துள்ளார். இவர் இனி டெல்லியில் இருக்கும் போது கன்னட ஊடகங்களின் செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டார். சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பின்பு ஊடகங்களுடன் உரையாடும்போது மிகவும் கவனமாக இருக்கிறார்.

இவர் ஊடகங்களின் கேமரா மற்றும் மைக் முன்பு இருப்பதை பொருட்படுத்தாமல், தனது கட்சி மேலிடத்தைப் பற்றிய விமர்சனத்தைக் கொட்டித் தீர்த்தார். தொலைக்காட்சி சேனல்கள் அவரது இந்தப் பேச்சை திரும்பத் திரும்பக் காட்டி தனது பார்வையாளர்களுக்கு விருந்தளித்தன. இதனால், இப்போது அவருக்கு ஊடக வெளிச்சம் கண்ணை கூசத் தொடங்கிவிட்டது.

எட்டு மாசம்.. தொடர்ச்சியாக காணாமல் போன உள்ளாடைகள் - உண்மை தெரிந்ததும் வெடித்த கலவரம்!

கட்சிக்கு அடங்காத தலைவர்:

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த பாஜக தலைவர் மாநிலத்தில் அரசியல் எதிரிகளைத் தொடர்ந்து உலுக்கி வருகிறார்.

இவர் தேசிய அரசியலில் செல்வாக்கு கொண்டவராக இருந்தாலும், மாநிலத்தில் உள்ள அவரது கட்சி சகாக்களை விட அதிகமாக இவர் தான் தென்படுகிறார். அவரது அணிவகுப்பைத் தடுக்கும் நோக்கில் மாநில அரசு இதுவரை ஏழு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால் அவற்றால் பலன் ஏதும் இல்லை.

சமீபத்தில், முதலமைச்சரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர், இவரைக் கட்டுப்படுத்த சில திரை மறைவு இராஜதந்திர முயற்சிகளைச் செய்துள்ளார். அவர் இந்த பாஜக தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒருவருடன் ரகசியச் சந்திப்பு நடத்தி, இவரை கட்டுக்குள் வைக்க உதவி கோரினார். பின், ஆளும் காங்கிரஸில் இருந்து ஒரு செய்தி டெல்லி பாஜகவுக்குச் சென்ற பின், அவரிடம் இருந்து சிறிது ஓய்வு பெற்றதாகத் தெரிகிறது.

கல்லூரியில் சேர வசதி இல்லையா? ஆன்லைனில் எளிமையாக ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்!

அரசியல் நியாயம்:

நாட்டில் நடைபெறும் எந்த ஒரு தேர்தலையும் ஒரு கிராமிய கண்காட்சிக்கு சமம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இரண்டு நிகழ்விலும் பார்வையாளர்களை (வாக்காளர்களை) வசீகரிக்கும் வேடிக்கைகள் மற்றும் நாடகக் கூறுகள் இருக்கும்.
வங்காளத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள் இந்த வரையறைக்கு உட்பட்டே நடந்து வருகிறது. கூச்சலும் ஆவேசமும் கலந்து எதிராளியை ஏளனம் செய்ய எல்லா முயற்சிகளும் நடக்கின்றன.

முதல்வர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசர அவசரமாக தரையிறங்கியதை அடுத்து, அவரைப் பார்த்து பரிதாபப்படுபவர்களுடன் சிலரின் விமர்சனங்களும் வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. இதற்கு முன் அவரது சக்கர நாற்காலி பிரச்சாரத்தை நினைவூட்டி, இது அனுதாப அலையை உருவாக்கி வெல்வதற்பு முயல்வதாக எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.

காங்கிரஸ் இதை தேர்தல் ஸ்டண்ட் என்று கூறி நிறுத்திக் கொள்கிறது. அக்கட்சி இரட்டை வாக்குச் சீட்டு சர்ச்சை என்ற விசித்திரமான கோட்பாட்டுடன் உலவுகிறது. அதன் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பதிவேட்டு எண்களுடன் கூடிய நகல் வாக்குச் சீட்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன உள்ளன என்கிறார்.

இந்த போலி வாக்குச் சீட்டுகள் எண்ணும் முன் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு அசல் வாக்குகளுக்குப் பதிலாகச் சேர்க்கப்படும் என்று அவர் குறைகூறுகிறார். பாஜகவின் சுவேந்து அதிகாரி போன்ற மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தக் குற்றச்சாட்டை எதிரொலிக்கின்றனர். காரணம் என்ன? ப்ரீ-பெய்டு கார்டு போல ஓட்டுகளும் வந்துவிடுமோ என்றுதான்!

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

டேவிட்சன் ரைடு:

மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு அரசியல் தலைவரால்கூட அவரது தலைசிறந்த காவலரான டேவிட்சன் தேவாசீர்வாதத்தை கையாள முடியவில்லை.

ஸ்டாலின், தனது அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்குப் பிறகு ED மற்றும் CBI உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு எதிராக தன் பலத்தைக் காட்ட முயற்சி செய்துவருகிறார். சினிமா பாணியில், “நாங்கள் திருப்பி அடித்தால் நீங்க தாங்கமாட்டீங்க'' என்று ஸ்டாலின் கூறியது ‘நா அடிச்ச தங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட’ என்ற பிரபலமான பாடலை நினைவூட்டுவதாக இருக்கிறது.

ஆனால், முழு ஆதாரங்களுடன் போலி பாஸ்போர்ட் மோசடியை மத்திய அரசு கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, தமிழக முதல்வர் சரண்டர் ஆகிவிட்டார். இந்த மோசடி பற்றி தலைமை உளவுத்துறை அதிகாரியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் எந்த முன் தகவலும் தெரிவிக்காததால் ஸ்டாலினுக்கு இது குறித்து எதும் தெரியவில்லை.

சமீபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் குறித்தும் டேவிட்சன் அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அதேபோல, ஸ்டாலின் சிங்கப்பூரில் இருந்தா செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறவிருப்பதாகவும் உளவுப் பிரிவு அரசை எச்சரிக்கவில்லை.

ஸ்டாலின் அரசுக்கு மேலும் சங்கடம் ஏற்படுவதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள டேவிட்சனுக்கு ஒரு புதிய பதவி வழங்கப்பட்டு டம்மி ஆக்கி வைக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டரில் எமர்ஜென்சியை அறிவித்த எலான் மஸ்க்! இனி தினசரி எக்கச்செக்க கட்டுப்பாடுகள்... முழுவிவரம் இதோ

click me!