பச்சம் என்ற கிராமத்தில் தான் ஒரு பெண்ணின் வீட்டில் தினமும் இரவு நேரங்களில் அவர் துவைத்து காயப்போடும் அவருடைய உள்ளாடைகள் தொடர்ச்சியாக காணாமல் போய்உள்ளது.
மனிதனுக்கு இருக்கும் நோய்களின் எண்ணிக்கையோ பல கோடி, ஆனால் வெகு சில மனிதர்களிடையே ஏற்படுகிற ஒரு வகை மனநோய் பலரை முகம் சுளிக்க வைக்கிறது என்றால் அது மிகையல்ல. அப்படி கேட்டதும் முகம் சுளிக்க வைக்கின்ற ஒரு சம்பவம் தற்போது குஜராத்தில் அரங்கேறி உள்ளது.
இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை இல்லை என்றாலும், இந்த சம்பவம் மாபெரும் அடிதடியில் போய் முடிந்துள்ளது. குஜராத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றுதான் அகமதாபாத், இங்கு தண்டுகா என்ற தாலுகாவில் உள்ள பச்சம் என்ற கிராமத்தில் தான் ஒரு பெண்ணின் வீட்டில் தினமும் இரவு நேரங்களில் அவர் துவைத்து காயப்போடும் அவருடைய உள்ளாடைகள் தொடர்ச்சியாக காணாமல் போய்உள்ளது.
ஆரம்பத்தில் ஓரிருமுறை இதை பெரிய விஷயமாக அவர் எடுத்துக்கொள்ளாத நிலையில், சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அவர் துவைத்து காயப்படும் உள்ளாடைகள் காணாமல் போக, இதை கண்டு திடுக்கிட்ட அந்தப் பெண், ஒரு நாள் ரகசியமாக தனது செல்போனை ஓரிடத்தில் வைத்து யார் இந்த வேலையை செய்து வருகிறார்கள் என்பதை கண்டறிய முயன்றுள்ளார்.
இதையும் படியுங்கள் : ராஜினாமா முடிவை கைவிட்டது ஏன்? மனம் திறந்த மணிப்பூர் முதல்வர்!
அப்பொழுதுதான் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 31 வயது நபர், துணிகளை துவைத்து காயபோட்ட பின் அனைவரும் அசந்த நேரத்தில் அவற்றை திருடிக் கொண்டு போவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவர், உடனடியாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார், அங்கு குவியலாக கிடந்த உள்ளாடைகளை கண்டு தலைசுற்றி நின்ற அவர், அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை பாலியல் ரீதியாக அந்த நபர் அணுகியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், பெண்ணின் உறவினர்கள் வந்து அந்த நபரை அடிக்க துவங்கி உள்ளனர். அடி தாங்க முடியாமல் அவர் கத்திய நிலையில் அந்த நபரின் சொந்தக்காரர்கள், மற்றும் அருகில் இருந்தவர்கள் ஒன்று கூட அந்த இடத்தில் மாபெரும் கலவரம் வெடித்துள்ளது.
சிலருக்கு மண்டை உடைந்ததாகவும், இந்த கலவரத்தில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரிடம் தகவல் அளித்த நிலையில், அவர்கள் சுமார் 20 பேரை தற்பொழுது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : லாட்ஜ் என்ற பெயரில் நடந்த விபச்சாரம்! கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு!