ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 32வது எபிசோட்.
கட்டிப்பிடித்த ஹெக்டே:
அனல் பறக்கும் இந்துத்துவப் பேச்சுகளால் அறியப்பட்ட அனந்தகுமார் ஹெக்டே, தீவிர காங்கிரஸ் விசுவாசி ஒருவரை கட்டிப்பிடித்தது அரசியலில் அவரது எதிர்கால நகர்வு குறித்த ஊகங்களுக்கு இடம் அளித்துள்ளது.
ஹெக்டே சமீபத்தில் கர்நாடகாவின் கார்வாரில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சதீஷ் சைலை கட்டித் தழுவினார். எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹெக்டே, கடந்த காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்பதால், இந்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஹெக்டே, காங்கிரஸுக்கு எதிரான அவரது உக்கிரமான பேச்சினால் இந்துத்துவா ரசிகர்களிடையே இன்னும் பிரபலமாக இருந்துவருபவர்.
ஹெக்டே சைலைக் கட்டிப்பிடித்ததற்குப் பின் என்ன சூட்சுமம் இருக்கிறது என்று அரசியல் கணிப்புகள் வரத்தொடங்கியுள்ளன. அவர் அரசியலில் இருந்து விலகியதில் இருந்து காவிக் கட்சி தலைமையின் மீதான அதிருப்தி வரை பல்வேறு காரணங்கள் பேசப்படுகின்றன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி அங்கோலாவுக்குச் சென்றபோது, ஹெக்டே அங்கு இல்லாதது வதந்திகளைக் கிளப்பியது. எதிர்த் தரப்பில் உள்ளவர்களுடனும் நட்புறவு கொள்ளலாம் என்ற புரிதலா அல்லது காங்கிரஸ் தலைமைக்கு கொடுத்த சிக்னலா என்று வரும் நாட்களில் தெரியவரும்.
அமலாக்கத்துறைக்கு சூப்பர் பவர்! ஜிஎஸ்டி முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
கரடி கதை:
அதிகமாகக் கவலைப்படுவது வயதானவர்களிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்சினை. அப்படியொரு கவலையில் தான் இருக்கிறார் கொப்பல் எம்.பி. செங்கன்னா கரடி.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 70 வயதைத் தாண்டிய தற்போதைய எம்.பி.க்களுக்கு மீண்டும் சீட் கிடைக்காமல் போகலாம் என்ற வதந்தி செங்கன்னாவை உலுக்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடுகள் எப்போதாவதுதான் ஊடக கவனம் பெற்றன.
வதந்திகளுக்கு அசராத செங்கன்னாவின் ஆதரவாளர்கள், வயதானாலும் தங்கள் தலைவர் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக கூறுகிறார்கள். அவர் ஆரோக்கியமாகவும் தயாராகவும் இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் செங்கன்னா, ''பிரதமர் மோடி அளவுக்குத்தான் எனக்கு வயதாகி இருக்கிறது. மோடிக்கு டிக்கெட் கிடைத்தால், எனக்கும் கிடைக்கும். அவருக்கு சீட் கிடைக்காமல் எனக்கும் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை.” என்று பேசியுள்ளார்.
அவரது இந்தப் பேச்சை அடுத்து பாஜக மூத்த தலைவர்கள் பி.எஸ். எடியூரப்பா மற்றும் பசவராஜ பொம்மை ஆகியோர் செங்கன்னாவின் பேசி அவரைச் சமாதானப்படுத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 26 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, வரும் தேர்தலில் ஒரு டஜன் தொகுதிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்களுக்குப் பதிலாக புதிய முகங்களைத் தேர்வு செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், செங்கன்னா மட்டுமின்றி சீட் கிடைக்குமா என்ற கவலையில் இருக்கும் மற்ற மூத்த தலைவர்களும் அவ்வப்போது ஏதாவது பேசி தங்கள் இருப்பை பதிவு செய்துவருகிறார்கள்.
ஊருக்குள்ளே வரக்கூடாது... உ.பி.யில் தலித் இளைஞரைத் தாக்கி செருப்பை நக்க வைத்த அவலம்!
தப்பித்த தலைவர்:
கால்பந்தாட்டத்தில் தடுப்பாட்டக்காரரின் செயல்பாடு அணியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடியது. இந்த விஷயத்தில் அரசியலிலும் வித்தியாசமில்லை. சரியான நேரத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதியின் தலையீடு ஒரு விவாதத்தின் போக்கை மாற்றுவதை அடிக்கடி கண்டிருக்கிறோம்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் லஞ்ச ஊழலில் சிக்கி தலைமறைவாக இருந்த நேரத்தில், எர்ணாகுளம் எம்பி ஹிபி ஈடன் அவரைக் காப்பாற்ற வந்தார். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கை இல்லை என்றாலும், கேரளாவின் தலைநகரை திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் ஈடன் தாக்கல் செய்த தனிநபர் மசோதா கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரனுக்கு எதிரான சர்ச்சையை முற்றிலுமாக அமைதிப்படுத்தியது.
சுதாகரன் மீதான குற்றச்சாட்டுகள் திடீரென்று மறைந்துவிட்டன. கட்சிக்குள் உள்ள தலைவர்கள் கூட ஈடனை குறிவைத்து கைகோர்த்தனர்.
சுவாரஸ்யமாக, ஈடனின் மசோதாவை அடுத்து முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான தாக்குதலைக்கூட எதிர்க்கட்சிகளும் நிறுத்துவிட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் வழக்கம் போல ‘டெல்லியில் தோஸ்தி, கேரளாவில் குஸ்தி’ என்ற வழியில் நடப்பதை ஆச்சரியம் இல்லையே.
வந்தே பாரத் ரயிலுக்கு காவியா? தேசியக் கொடியில் உள்ள நிறம் என்று ரயில்வே அமைச்சர் விளக்கம்
மொபைல் தடை:
உத்திரபிரதேசத்தில் ஒரு பெரிய கட்சியின் தலைவரை செல்போன்கள் பற்றிய கவலை வாட்டி வதைக்கிறது. கட்சியின் முக்கிய கூட்டங்களில் தலைவர்கள் தங்கள் செல்போன்களை எடுத்துவர அனுமதித்தால், கட்சியின் உட்கட்சி நடவடிக்கைகள் வெளியே கசிந்துவிடும் என்று அவர் அஞ்சுவதாகத் தெரிகிறது.
மக்களைவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அந்த இளம் தலைவர் மிகவும் உஷாராக இருக்க விரும்புகிறார். அண்மையில் முக்கியமான சந்திப்புகளின் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் கசிந்தது அவரைச் சங்கடப்படுத்தி இருக்கிறது. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.
எட்டப்பனாக மாறி உள்கட்சி ரகசியங்களை எதிர் முகாமுக்கு அனுப்பிய அந்த ஒரு தலைவரை மற்ற தலைவர்களும் தொண்டர்களும் வறுத்தெடுக்கிறார்கள்.
இந்நிலையில் பொதுத்தேர்தலை ஒட்டி சீட் வாங்கும் ஆசையில் மேலும் சிலர் எட்டப்பனாக மாறக்கூடும் என்பதால், மக்களவைத் தேர்தல் முடியும்வரை, கூட்டங்களுக்கு வரும் தலைவர்கள் காலணிகளுடன் மொபைல் போன்களையும் வெளியே வைத்துவிட்டு வரவேண்டும் என்று இளம் தலைவர் உத்தரவு போட்டிருப்பதாகத் தெரிகிறது. கூடவே சுயமரியாதையாகவும் விடவேண்டியது இருக்கலாம்!
ஏமாற்றிய தலைமை:
பாஜகவின் தலைமை ராஜஸ்தானில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராணியை கட்சியின் முகமாக அறிவித்தது, மற்றொரு தலைவரின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. மக்களைத் திரட்டி, உடனடிப் போராட்டங்களை நடத்துவதில் பெயர் பெற்ற அந்தத் தலைவர் சட்டென்று தலைமறைவாகிவிட்டார்.
சமீப ஆண்டுகளில், அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம் அல்லது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பங்கு பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
ஆனால் சமீபத்தில் உதய்பூரில் பாஜக மேலிடத்தின் முடிவைத் தெரிந்தகொண்ட பிறகு, தான் ஓரங்கட்டப்படும் அபாயத்தை உணர்ந்துள்ளார்.
ஆனால், மறு அறிவிப்பு வரும் வரை போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம் என்று அவர் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இனிமேல் முயற்சி செய்வது பயனற்றது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Explained: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் யாருக்கு கிடைக்கும்? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு