தலித் இளைஞரை அவமானப்படுத்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்த தேஜ்பாலி சிங் மின்சாரத்துறையில் லைன்மேன் வேலை பார்ப்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞரைத் தாக்கி, கட்டாயப்படுத்தி செருப்பை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வீடியோ ஒன்றில் ஒரு நபர் பாதிக்கப்பட்ட தலித் இளைஞரை அதட்டி, தான் காலில் அணிந்திருக்கும் செருப்பை நக்கச் சொல்லி, தனது வலது காலை முன்னோக்கி நீட்டுகிறார். அந்தத் தலித் இளைஞரும் கைகளை தரையில் ஊன்றியபடி, தன் கைகளால் அந்த நபரின் கால்களைத் தொட்டு செருப்பை நக்கத் தொடங்குவதை வீடியோவில் காண முடிகிறது.
ஈ-காமர்ஸ் ஊழியர்களுக்கு ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ்! கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு!
மேலும் அந்த தலித் இளைஞர் காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதையும் வீடியோவில் காணலாம். மற்றொரு வீடியோவில் அந்த இளைஞர் கீழே தள்ளி தாக்கி, தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டுவதையும் பார்க்க முடிகிறது. உத்தர பிரதேசத்தின் சோனபத்ரா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் இந்த வார தொடக்கத்தில் நடந்திருந்தாலும், தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Tejbali Singh, an upper caste hindu lineman in UP's Sonbhadra, forced a Dalit to lick his slipper and squat after altercation and yes this the condition of dalit in double engine sarkar! pic.twitter.com/XisC6FZbVS
— Vanchit Shoshit Samaj (@BanchitSoshit)பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் பெயர் ராஜேந்திரா என்று தெரியவந்துள்ளது. அவரை அவமானப்படுத்திய நபர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த தேஜ்பாலி சிங் என்றும் மின்சாரத்துறையில் லைன்மேன் வேலை பார்ப்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்திய ஏவுகணைகள் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்குக் கசியவிட்ட டிஓர்டிஓ அதிகாரி!
தலித் இளைஞர் ராஜேந்திரா தனது தாய் மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டீல் மின்சார பிரச்சனை இருந்துள்ளது. அதைச் சரிசெய்ய வந்த லைன்மேன் தேஜ்பாலி சிங் ராஜேந்திராவைக் கண்டதும் சரமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளார். திரும்ப அந்தப் பகுதிக்கு வரக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
தேஜ்பாலி சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
அமலாக்கத்துறைக்கு சூப்பர் பவர்! ஜிஎஸ்டி முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை