ஏசியாநெட் நியூஸ் எக்சிகியூட்டிவ் எடிட்டர் சிந்து சூர்யகுமாருக்கு எதிராக பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டதற்காக முன்னாள் துணை நீதிபதி எஸ் சுதீப்க்கு பல ஊடகவியலாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏசியாநெட் நியூஸ் எக்சிகியூட்டிவ் எடிட்டர் சிந்து சூர்யகுமாருக்கு எதிராக பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டதற்காக முன்னாள் துணை நீதிபதி எஸ் சுதீப்க்கு பல ஊடகவியலாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முரண்பாடாக, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம், நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், முக்கிய மற்றும் ஆன்லைன் ஊடகங்களை வேட்டையாடும் நேரத்தில், இடதுசாரி அனுதாபியான சுதீப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிந்து மற்றும் பிற செய்தியாளர்கள் கேரள அரசால் வேட்டையாடப்படுவதை ஏசியாநெட் நியூஸ் வலுவாக எதிர்த்து நிற்கிறது. 'நேர்மை, துணிவு, உறுதி' என்பதன் அடிப்படையில் செயல்படும் இதழியல் பணியை எத்தகைய உருட்டல் மிரட்டல் மூலமும் அமைதிப்படுத்த முடியாது.
வந்தே பாரத் ரயிலுக்கு காவியா? தேசியக் கொடியில் உள்ள நிறம் என்று ரயில்வே அமைச்சர் விளக்கம்
சபரிமலை விவகாரம் தொடர்பான தனது பதிவுகளுக்காக உயர்நீதிமன்றத்தின் விசாரணையின் எதிரொலியாக ஜூன் 2021 இல் துணை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார் சுதீப். இவர் ஏசியாநெட் நியூஸ் வெளியிட்டுவரும் சிந்து சூர்யகுமாரின் வாராந்திர நிகழ்ச்சியான 'கவர் ஸ்டோரி' குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
'கவர் ஸ்டோரி' நிகழ்ச்சி எப்போதுமே மாநில மற்றும் மத்திய அரசுகள் மீதான கூர்மையான விமர்சனம் மற்றும் கண்ணோட்டத்திற்காக புகழ்பெற்றது. இந்நிலையில், 'கவர் ஸ்டோரி'யில் கூறப்படுவது தவறு என்று சிந்து சூர்யகுமார் மீது சுதீப் குற்றம்சாட்டியுள்ளார். அவரது பதிவு ஏசியாநெட் நியூஸ் தலைமையை கேலி செய்வதாகவும் பொதுவெளியில் சேனலை சிறுமைப்படுத்தும் வகையிலும் உள்ளது என நெட்டிசன்களும் ஊடகவியலாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சுதீப், துணை நீதிபதியாக பணியாற்றியபோது, சபரிமலை விவகாரம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்னதை அடுத்த அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சுதீப் நீதித்துறை பணியில் இருந்து விலகினார்.
ஊருக்குள்ளே வரக்கூடாது... உ.பி.யில் தலித் இளைஞரைத் தாக்கி செருப்பை நக்க வைத்த அவலம்!