வேறொரு பெண்ணுடன் இருந்த கணவர்.. கையும் களவுமாக பிடித்த முன்னாள் வைசாக் அழகி.. வைரல் வீடியோ..

Published : Jun 01, 2024, 11:01 AM ISTUpdated : Jun 01, 2024, 11:04 AM IST
வேறொரு பெண்ணுடன் இருந்த கணவர்.. கையும் களவுமாக பிடித்த முன்னாள் வைசாக் அழகி.. வைரல் வீடியோ..

சுருக்கம்

முன்னாள் வைசாக் அழகியான நக்ஷத்ரா தனது கணவர் திரிபுரானா வெங்கட சாய் தேஜாவின் கள்ள உறவை ஊடகங்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.

திருமணத்தை மீறிய கள்ள உறவு என்பது தற்போது மிகவும் பொதுவான விஷயமாக மாறிவிட்டது. கள்ள உறவு தொடர்பாக அதனால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்பாகவும் அவ்வப்போது பல செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக வேறொரு பெண்ணுடன் இருக்கும் தங்கள் கணவரை பெண்களை கையும் களவுமாக பிடிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

முன்னாள் வைசாக் அழகியான நக்ஷத்ரா தனது கணவர் திரிபுரானா வெங்கட சாய் தேஜாவின் கள்ள உறவை ஊடகங்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தினார். நக்ஷத்ரா பத்திரிகையாளர்களை தேஜாவின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர் வேறொரு பெண்ணிடம் இருந்ததை கையும் களவுமாக கண்டுபிடித்துள்ளார்.

காலையிலேயே குட் நியூஸ்..!!! குறைந்தது சமையல் எரிவாயு விலை..? எவ்வளவு தெரியுமா.?

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், நக்ஷத்ரா ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவதையும், அவரின் கணவர் தரையில் மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணுடன் உள்ளே இருப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும் அதனை பார்த்த நக்‌ஷத்ரா அழுது கொண்டே அந்த பெண்ணை சபிப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும் அந்த பெண்ணின் மீது பொருட்களை வீசுகிரார். அப்போது அவரின் கணவர் குறுக்கிடும் போது, நக்ஷத்ரா சரமாரியாக பலமுறை அடிக்கிறார்.

 

நக்ஷத்ரா மற்றும் தேஜா இருவரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள். 2013 இல் ஒரு திட்டத்தில் பணிபுரியும் போது சந்தித்தனர். 2017 இல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

மூக்கால் டைப்பிங்! வேற லெவல் டேலண்ட்! 3வது முறை கின்னஸ் உலக சாதனை படைத்த இந்தியர்!

தங்கள் திருமணத்தை காப்பாற்ற நக்‌ஷத்ரா தொடர்ந்து முயற்சித்த போதிலும், தேஜா திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது செயல்களால் விரக்தியடைந்த அவர், அவரை பகிரங்கமாக வெளிப்படுத்த ஊடகங்களை அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், நக்ஷத்ராவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த தேஜா, தன்னையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பொய்யாகக் குற்றம் சாட்டுவதாக உறுதிபடுத்தினார். சம்பந்தப்பட்ட பெண் தனது அலுவலகத்தில் ஒரு திரைப்படத் திட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார் என்றும் விளக்கமளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!