Lok Sabha Election: இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... எத்தனை தொகுதி.? முக்கிய வேட்பாளர்கள் யார்.?

By Ajmal Khan  |  First Published Jun 1, 2024, 6:36 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக பிரதமர் மோடி வாரணசி தொகுதியில் போட்டியிடுகிறார். 
 


இறுதி கட்ட தேர்தல் தொடங்கியது

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. 7 கட்டங்களாக கடந்த 2 மாதங்களுக்கு மேல் நடைபெற்ற தேர்தலில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 7வது மற்றும் இறுதி கட்டமாக இன்று  7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தர பிரதேச மாநிலத்தில் 13 தொகுதிகள், பஞ்சாப் மாநிலத்தில் 13, மேற்கு வங்கம் 9, பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3 மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 1 தொகுதியில் இத்தேர்தல் நடைபெற்று வருகிறது.  

Latest Videos

undefined

முக்கிய வேட்பாளர்கள் யார்.?

இன்றைய 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் முக்கிய நட்சத்திர வேட்பாளராக பிரதமர் மோடி 3வது முறையாக உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார். மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக அஜய் ராய் களத்தில் உள்ளார். இதே போல உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் பாஜக சார்பாக நடிகர் ரவி கிஷண், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் களத்தில் உள்ளார்.  இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் பாஜக சார்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் போட்டியிடுகிறார். 

ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை 

காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மகன் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். இறுதி கட்ட வாக்குப்பதிவை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. இன்றோடு நாடு முழுவதும் வாக்குப்பதிவு முடிவடையவுள்ள நிலையில் வருகிற 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜூன் 2ஆம் தேதி சரணடைய உள்ளேன்... என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்!

click me!