வணிக நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் எரிவாயு விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை
சமையல் எரிவாயு விலை குறைந்தது
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்துள்ளது.
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. இதையடுத்து சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 1, 840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1, 911க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் வீட்டு பயன்பாட்டுக்காக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை குறைந்துள்ள நிலையில் ஓட்டல் நிர்வாகத்தினர் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.