
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஹிமாச்சல் பிரதேசம், மண்டி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார் கங்கனா ரனாவத். இந்நிலையில் சண்டிகர் விமான நிலையத்தில் விவசாயிகளை அவமரியாதை செய்ததாக கூறி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை காவலர் ஒருவர் அறைந்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் இருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ரனாவத், டெல்லிக்கு விமானத்தில் ஏறவிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. புதிய எம்பியை அறைந்ததாகக் கூறப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இப்பொது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமராக நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி பதவியேற்பு!
இந்த சம்பவம் குறித்து வெளியான ஒரு பரபரப்பு காணொளியில் அரசியல் தலைவர் ரனாவத்தை, பாதுகாப்பு அதிகாரிகளின் வளையத்தால் பாதுகாப்பு சோதனைக்கு அழைத்துச் செல்லப்படுவதை காட்சிகள் காட்டுகிறது, அங்கு அவர் சில CISF அதிகாரிகளுடன் பேசுவதையும் காணமுடிகிறடித்து. இந்த சம்பவத்தை CISF கமாண்டன்ட் கவனத்தில் கொண்டு, அந்த கான்ஸ்டபிளை விசாரித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அவரது உதவியாளர் ஒருவர் உள்ளூர் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
"நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். செக்யூரிட்டி செக்-இன் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. பெண் காவலர் நான் கடக்கும் வரை காத்திருந்தார். பின் என் அருகில் வந்து என்னை அடித்தார்" என்று கங்கனா ரனாவத் வெளியிட்ட தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருந்தார். விவாசியிகளை திட்டியதால் கங்கனாவை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
ரூ.37 லட்சம் மதிப்பில் நகைகள்.. ஆடம்பர பங்களா.. ஸ்மிருதி இரானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?