இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை உயர்வு: யார் இந்த சுயேச்சை விஷால் பாட்டீல்?

By Manikanda Prabu  |  First Published Jun 6, 2024, 8:24 PM IST

சுயேச்சை எம்.பி. விஷால் பாட்டீல் ஆதரவளித்துள்ளதால் இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது


மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட விஷால் பாட்டீல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளார். இதன் மூலம், இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதால் அக்கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

Tap to resize

Latest Videos

மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லிதொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட விஷால் பாட்டீல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளார். இதன் மூலம், இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதால் அக்கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது.

விஷால் பாட்டீலின் ஆதரவை வரவேற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “மக்கள் துரோகம், ஆணவம் மற்றும் பிரிவினை அரசியலை தோற்கடித்துள்ளனர். இது சமூக நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்காகப் போராடிய, சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் போன்ற நமது எழுச்சியூட்டும் தலைவர்களுக்குச் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாகும். சாங்லியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., விஷால் பாட்டீல், காங்கிரஸ் கட்சிக்கு அளித்த ஆதரவை வரவேற்கிறேன். அரசியல் சாசனம் வாழ்க” என தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஆகிய கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. இந்த கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையின் போது, சாங்லி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனவும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் வசந்ததாதா பாட்டீலின் பேரனான விஷால் பாட்டீலுக்கு அந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பங்குச்சந்தையில் ஊழல்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆனால், இதில் உடன்பாடு எட்டவில்லை. அந்த தொகுதிக்காகவும், விஷால் பாட்டீலை வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனவும் கட்சி மேலிடத்திடம் மகாராஷ்டிர மாநில காங்கிரஸால் நடத்திய பேச்சுவார்த்தையும், அதனைத்தொடர்ந்து சிவசேனாவிடம் காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. இறுதியாக சிவசேனாவுக்கு (உத்தவ் தாக்கரே) அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியை சேர்ந்த மல்யுத்த வீரர் சந்திரஹர் பாட்டீல் என்பவர் இந்தியா கூட்டணி சார்பாக மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் வேட்பாளராக களம் கண்டார்.

இதனால், காங்கிரஸில் இருந்து விலகி சாங்லி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட விஷால் பாட்டீல், மக்களவைத் தேர்தலில் அந்த தொகுதியில் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அந்த தொகுதியின் பாஜக சிட்டிங் எம்.பி. சஞ்சய்காகா பாட்டீல் இரண்டாமிடமும், இந்தியா கூட்டணி வேட்பாளர் சந்திரஹர் பாட்டீல் மூன்றாமிடமும் பிடித்தனர்.

சாங்லி தொகுதி முடிவு குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், “உள்ளூர் மட்டத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் எங்கள் வேட்பாளரை கைவிட்டனர், ஆனால் காங்கிரஸ் உயர் தலைவர்கள் எங்களுடன் இணக்கமாக இருந்தனர். மகா விகாஸ் அகாடி வேட்பாளரை உள்ளூர் தலைவர் ஆதரிக்கவில்லை. எப்படியிருந்தாலும், விஷால் பாட்டீல் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் நீடிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட விஷால் பாட்டீல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளார். இதன் மூலம், இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதால் அக்கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது. அவர் கூடிய விரைவில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என தெரிகிறது.

click me!