ஃபெமினா மிஸ் இந்தியாவாக சென்னை மாணவி தேர்வு

First Published Jun 20, 2018, 10:54 AM IST
Highlights
Femina Miss India 2018 - Tamil Nadu girl Anukreethy Vas declared winner


பெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி அனுக்ரீத்தி வாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற இந்த பிரம்மாண் நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம பெற்றன.

பாலிவுட் பிரபலங்களான மாதுரி தீக்சித், கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 30 பேர் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டனர்.

நடுவர்களாக கிரிக்கெட் வீரர்கள் இர்ஃபான் பதான், கே.எல்.ராகுல், பாலிவுட் பிரபலங்கள் மலைகா அரோரா, பாபிதியோல், குனால் கபூர், 2017 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவான மனுஷி சில்லார் ஆகியோர் இருந்தனர்.

போட்டியின் இறுதியில் சென்னையைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையில் படித்து வரும் அவருக்கு வயது 19. 

பெமினா மிஸ் இந்தியாவாக தேர்ந்தொடுக்கப்பட்ட அவருக்கு, கடந்த வருட மிஸ் இந்யிவான மனுஷி சில்லர், கிரீடத்தை அணிவித்தார். அனுக்ரீத்தி வாஸ் இந்த ஆண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்து கொள்வார். 

இரண்டாவது இடத்தில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரியும், மூன்றாவது இடத்தை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் என்பவரும் பெற்றனர். மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் யுனைடெட் காண்டினண்ட்ஸ் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

click me!