எச்சில் துப்ப எட்டிப் பார்த்த பெண்... ஜன்னலில் வசமாக சிக்கிய தலை... வைரலாகும் வீடியோ!

By SG Balan  |  First Published May 18, 2024, 1:50 PM IST

பேருந்தில் ஒரு பெண் ஜன்னல் கண்ணாடியில் இருந்த சிறிய இடைவெளியில் தன் தலையைக் நீட்டியிருக்கிறார். பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ​​எட்டிப் பார்த்து எச்சில் துப்புவதற்காக அவர் தலையை வெளியே நீட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிறகு அவரால் தலையை எடுக்க முடியவில்லை.


கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் சக்தி யோஜனா என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன் மூலம் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

பஸ்களில் இருக்கை மற்றும் டிக்கெட் கேட்டு, பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பெங்களூரு அரசுப் பேருந்து ஒன்றில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Latest Videos

undefined

கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் ஒரு பெண் ஜன்னல் கண்ணாடியில் இருந்த சிறிய இடைவெளியில் தன் தலையைக் நீட்டியிருக்கிறார். பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ​​எட்டிப் பார்த்து எச்சில் துப்புவதற்காக அவர் தலையை வெளியே நீட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிறகு அவரால் தலையை எடுக்க முடியவில்லை.

திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய வேண்டுமா? எவ்வளவு செலவாகும்? எப்படி முன்பதிவு செய்வது?

ஜன்னலில் தலை மாட்டிக்கொண்டு சிக்கி தவித்த அந்தப் பெண், தலையை உள்ளே எடுக்க போராடினார். எவ்வளவோ முயன்றும் அந்த பெண்ணால் ஜன்னலில் இருந்து தலையை பின்னோக்கி நகர்த்த முடியவில்லை. அப்போது அந்தப் பேருந்தின் ஓட்டுநர் இந்தப் பெண் சிரமப்படுவதைக் கவனித்துள்ளார்.

சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஜன்னலில் இருந்து அந்தப் பெண்ணின் தலையை கவனமாக அகற்ற முயன்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஜன்னலில் மாட்டியிருந்த அந்தப் பெண்ணின் விடுவிக்கப்பட்டது. அந்தப் பெண் நல்ல வேளையாக தலை தப்பியது என்று எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டார். உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அப்பகுதியில் இருந்த சிலர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கிவிட்டனர். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் பேருந்தில் செல்லும்போது தலையை வெளியே நீட்டக் கூடாது என்று தெரியாதா என அட்வைஸ் செய்கின்றனர். வேறு வாகனம் எதுவும் பேருந்தை முந்திச் செல்ல முயன்றால் தலை என்ன ஆகியிருக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.

PF பணம் மூன்றே நாளில் கிடைக்கும்! அவசரத் தேவைக்கு ஆட்டோ செட்டில்மெண்ட் செய்யும் EPFO!

click me!