இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே மாதத்தில் லாக்டவுன் விதிக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதுவரை உருமாறிய கொரோனா மாறுபாடுகளில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்புக்கு ஒமிக்ரானின் XBB.1.16 மாறுபாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, நெரிசலான இடங்களை தவிர்ப்பது, கைகளை கழுவது போன்ற கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 40 பெண்களுக்கு ஒரே கணவர்.. சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது கொரோனா லாக்டவுன் தொடர்பாக ஒரு செய்தி வேகமாக பரவுகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், மத்திய அரசு மே மாதத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெய்லி ட்ரெண்டிங் நியூஸ் என்ற யூடியூப் சேனல் இந்த வீடியோவை பதிவேற்றி உள்ளது. கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருவதால் மே மாதத்தில் நாடு தழுவிய பூட்டுதல் இருக்கும் என்று வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பத்திரிக்கை தகவல் பணியகமான PIBன் உண்மைச் சரிபார்ப்புக் குழு இந்த செய்தி போலியானது என்று கண்டறிந்தது.
📣
'Daily Trending News' नामक चैनल के एक वीडियो में दावा किया जा रहा है कि संक्रमण के बढ़ने के कारण मई में भारत में लगेगा लॉकडाउन
▶️ यह दावा है
▶️ कृपया फ़र्ज़ी खबरों से सावधान/सतर्क रहे एवं ऐसी खबरों को आगे साझा न करें pic.twitter.com/tjIUmtmsaW
உரிமைகோரல்: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மே மாதத்தில் அரசாங்கம் பூட்டுதலை விதிக்கும்.
உண்மை: வீடியோ போலியானது. நிலைமை கட்டுக்குள் இருப்பதால் அரசு சார்பில் லாக்டவுன் விதிக்க எந்த திட்டமும் இல்லை.
உண்மைச் சரிபார்ப்புக் குழு, மே மாதத்தில் புதிய லாக்டவுன் இருக்கும் எனக் கூறும் வீடியோ போலியானது மற்றும் தவறானது எனக் கண்டறிந்தது. மேலும் இதுபோன்ற உரிமைகோரல்களை சரிபார்க்காமல் இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இணையத்தில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை தடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் PIB கடந்த 2019- ம் ஆண்டு உண்மை சரிசார்ப்பு பிரிவை தொடங்கியது. சமூக ஊடக தளங்களில் பரவும் போலி மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காண்பதே அதன் நோக்கம். எனவே இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் வந்தால் அதன் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்ளலாம். PIBன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://factcheck.pib.gov.in/ செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வாகன ஓட்டிகளே கவனம்.. இந்த போர்டு இருந்தால், வாகனத்தை நிறுத்த வேண்டாம்.. ஆபத்து..