
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி முடிகிறது, இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் 2023ம் ஆண்டு ஜனவரி 8ம்தேதி முடிகிறது.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி: பிரிட்டிஷ் ஆட்சியில்கூடஇப்படி இல்லீங்க ! கெஜ்ரிவால் குமுறல்
ஆதலால், பதவிக்காலம் முடிவதற்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை இன்று அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். அப்போது இரு மாநிலங்களுக்கானத் தேர்தல் தேதிகளை அறிவிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தல் தேதி அறிவிகத்தான் செய்தியாளர்களை தேர்தல் ஆணையர் சந்திக்கிறாரா என்பதும் தெரியாது.
கணவரென்றும் பாராமல் வெளுத்த மனைவி! காதலியுடன் ஷாப்பிங் சென்று சிக்கிக்கொண்டார்: வைரல் வீடியோ
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர்சமீபத்தில் இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரு மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் தேர்தலுக்குப்பின், குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தல் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது.ஆட்சியைத் தக்கவைக்க பாஜக கடுமையாகப்போராடும், அதேநேரம் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருகிறது இது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் சிவோர்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 135 இடங்களில் இருந்து 143 இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் வியாபாரிக்கு அடித்த யோகம்!! 2 மணிக்கு வங்கி கடன் நோட்டீஸ்,3.30 மணிக்கு லாட்டரி பரிசு
காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 2 இடங்களும்கிடைக்கலாம்.
இமாச்சலப் பிரதேச தேர்தல் குறித்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மொத்தமுள்ள 68 இடங்களில், பாஜக 37 முதல் 45 இடங்களை வெல்லும் எனத் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 20 முதல் 21 இடங்களைக் கைப்பற்றலாம். இமாச்சலப் பிரதேசத்திலும் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.