ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் கோவில் மேம்பாட்டிற்காக ரூ.5 கோடி நன்கொடை வழங்கினார்.
கடந்த சில வாரங்களாக முகேஷ் அம்பானி பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயிலுக்கு சென்றிருந்தார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் மற்றும் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.
மேலும் படிக்க:Mukesh Ambani Net Worth:இந்திய கோடீஸ்வரர்கள் ஏன் வெளிநாடுகளில் அலுவலகம் திறக்கிறார்கள்? காரணம் என்ன?
இந்நிலையில் நேற்று உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்ற அவர், சிறப்பு பூஜையில் கலந்துக் கொண்டார். பின்னர் பத்ரிநாத் மற்று கேதார்நாத் கோவில்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நன்கொடையாக ரூ.5 கோடி காசோலையை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
மேலும் படிக்க:5G Launch: அடுத்த ஆண்டிற்குள் கிராமங்கள் முழுவதும் 5ஜி கொண்டு வரப்படும்: முகேஷ் அம்பானி
வரும் தீபாவளிக்குள் நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் முழுமையான 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் 2023 டிசம்பருக்குள் இந்தியாவில் அனைவரும் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.