பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனமும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரிட்டிஷ் ஆட்சியில் கூட உணவுப் பொருட்களுக்கு இப்படி வரி விதிக்கப்பட்டது இல்லை என்று மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனமும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரிட்டிஷ் ஆட்சியில் கூட உணவுப் பொருட்களுக்கு இப்படி வரி விதிக்கப்பட்டது இல்லை என்று மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு
ரொட்டி, சப்பாத்தி, நான் வகைகளுக்கு 5 சதவீதம் வரியும் பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் அதாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) அமைப்பிடம் பல தரப்பினரும் முறையிட்டனர்.
அதற்கு ஏஏஆர் அமைப்பு அளித்த விளக்கத்தில் “சப்பாத்தி, ரொட்டி மற்றும் பரோட்டா என்பது வெவ்வேறு. சமைக்கப்பட்ட உணவுகளுக்கு அதாவது ரெடி டூ ஈட் உணவுகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், சமைக்கப்படும் உணவுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது” என விளக்கம் அளித்தது
இதை எதிர்த்து குஜராத்தின் ஏஏஏஆர் தீர்ப்பாயத்தில் மனுதாரர்கள் மேல்முறையீடு செய்தனர். அந்த தீர்ப்பில், “ மனுதாரர் நடத்தும் உணவு நிறுவனம் 8 வகையான பரோட்டாக்களை தயாரித்து விற்கிறது. மலபார் பரோட்டா, மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா, ஆனியன் பரோட்டா, மெதி பரோட்டா, ஆலு பரோட்டா, லச்சா பரோட்டா, மூளி பரோட்டா, ப்ளைன் பரோட்டா ஆகியவற்றை தயாரிக்கிறது.
ஆர்பிஐக்கு நெருக்கடி! செப்டம்பர் சில்லறை பணவீக்கம் 7.41 சதவீதமாக அதிகரிப்பு
பரோட்டாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களில் கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, காய்கறி, மூளி, வெங்காயம், மேதி உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ரொட்டி, சப்பாத்தி போன்றவை நன்கு சமைக்கப்பட்டவை. அவற்றை அப்படியே சாப்பிடமுடியும். நன்கு சமைக்கப்பட்ட உணவுக்கும், பகுதி சமைக்கப்பட்ட அல்லது சூடுசெய்யப்படவேண்டிய பொருட்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. கடைகளில் விற்கப்படும் பேக்டு பரோட்டாக்கள் பேக்கிங்கை உடைத்தபின் 3 அல்லது 4 நிமிடங்கள் சூடு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசியின் குட் நியூஸ்!நவராத்திரி விரதச் சாப்பாடு அறிமுகம்:விலை குறைவு
ஆதலால் சப்பாத்தி, ரொட்டி வகையில் பரோட்டாவைச் சேர்க்க முடியாது. கடைகளில் வாங்கி உடனடியாக சாப்பிடும் உணவுப் பொருட்கள் அதாவது ரெடி டூ ஈட் பொருட்களுக்கு மட்டும் 5 சதவீதம் ஜிஎஸ்டி பொருந்தும். பீட்சா, பிரட், ரஸ்க், டோஸ்டட் பிரட் போன்றவைக்கு மட்டும்தான் 5 சதவீதம் ஜிஎஸ்டி பொருந்தும்.” எனத் தெரிவித்தது
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் “ ஆங்கிலேயர் ஆட்சியில் கூட உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது இல்லை. நாட்டில் பணவீக்கம் மிக அதிகமாக உயர்ந்தமைக்கு மிகப்பெரிய காரணமே, மத்திய அரசு விதிக்கும் அதிகமான ஜிஎஸ்டி வரிதான். உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட வேண்டும், மக்களை பணவீக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்