டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மூத்த தலைவர் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மூத்த தலைவர் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மத ரீதியான இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை இன்று சந்தித்து 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினர்.
இதையும் படிங்க: எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது பிடிஆரின் விளக்கம்.. நாராயணன் திருப்பதி விமர்சனம்!!
இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பின் போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அண்ணாமலை ஆகியோரும் அமித்ஷாவுடன் இருந்தனர். அவர்கள் பாஜக - அதிமுக இடையிலான விரிசல் குறித்து உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் திரு மற்றும் அதிமுகவின் தலைவர்கள், நமது தேசிய தலைவர் திரு அவர்களையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அவர்களையும் டில்லியில் இன்று சந்தித்தனர். pic.twitter.com/lzLlvXFy3L
— K.Annamalai (@annamalai_k)