மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சொல்கிறார்.
தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமையன்று தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி காங்கிரஸைத் தாக்கினார்.
கடந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் பலமான டபுள் எஞ்சின் அரசு நடப்பதால் எந்தக் கலவரமும் நடக்கவில்லை என்று கூறிய அவர், "காங்கிரஸ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை திருப்திப்படுத்த மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறது. இது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது" என்று குற்றச்சாட்டினார். முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஜேடி(எஸ்) கட்சியின் கோட்டையான மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளார்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 2பி பிரிவின் கீழ் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை குறிப்பிட்டுப் பேசிய அவர், கர்நாடகாவின் பாஜக அரசாங்கம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்பு ஆதரிக்கவில்லை என்பதால் அதனை ரத்து செய்தது என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கில் இருந்து விலகும் நீதிபதி! வேறு அமர்வுக்கு மாற்ற கோரிக்கை
இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து, கர்நாடக மாநிலத்தின் இரு ஆதிக்க சமூகங்களான வோக்காலிகா மற்றும் லிங்காயத்து சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை தலா இரண்டு சதவீதம் அதிகரித்தது.
"இந்தியா 1947ஆம் ஆண்டு மத அடிப்படையில் பிரிக்கப்பட்டது. நாடு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அங்கீகரிக்க முடியாது. மற்றொரு பிரிவினையை உருவாக்க நாங்கள் தயாராக இல்லை" எனவும் யோகி கூறினார். மத்தியிலும் கர்நாடகாவிலும் உள்ள பாஜக அரசுகள் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான உத்தரவாதம் உள்ளது. ஊரடங்கு உத்தரவு இல்லை, கலவரம் இல்லை. அங்கு எல்லாம் நன்றாக உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், எந்த கலவரமும் நடக்கவில்லை" என்று கூறிய உ.பி. முதல்வர், தனது மாநிலம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதையில் பயணிக்க 'டபுள் எஞ்சின்' அரசாங்கம்தான் என்று தெரிவித்தார். 'ஒரே இந்தியா, மகத்தான இந்தியா' என்ற கருத்து மட்டுமே இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அமெரிக்காவுக்குப் போய் 500 சதவீதம் அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள்! ஆய்வில் தகவல்