இந்தியக் கடற்படையில் ஐஎன்எஸ் சுமேதாவில் சூடானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் நெருக்கடி சூழலில் தாங்கள் எதிர்கொண்ட சோதனைகளை விவரித்துள்ளனர்.
சூடானில் கடந்த வாரம் இராணுவத்திற்கும், சக்திவாய்ந்த துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் பல நாடுகள் அங்கிருக்கும் தங்கள் குடிமக்களை மீட்டுவரும் முயற்சியைத் தொடங்கின. இச்சூழலில் சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே 72 மணி நேர நாடு தழுவிய போர் நிறுத்தம் அறிவித்தது. அடுத்த 24 மணி நேரத்திற்குள், இந்தியா சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி மீட்புப் பணியைத் தொடங்கியது.
சூடான் துறைமுகத்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்திற்கு மொத்தம் 528 இந்தியர்களை மீட்டு அவர்கள் நாடு திரும்ப ஏற்பாடு செய்துள்ளது. இந்தியக் கடற்படையில் ஐஎன்எஸ் சுமேதாவில் சூடானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் நெருக்கடி சூழலில் தாங்கள் எதிர்கொண்ட சோதனைகளை விவரித்துள்ளனர்.
undefined
ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கில் இருந்து விலகும் நீதிபதி! வேறு அமர்வுக்கு மாற்ற கோரிக்கை
அவர்களில் ஒருவர் கூறியதாவது: "துணை ராணுவப் படை எங்கள் நிறுவன அலுவலகத்திற்கு வந்தது. திங்கள்கிழமை காலை 9 மணியளவில் எங்கள் நிறுவனத்திற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடந்தி எங்கள் பொருட்களை சூறையாடத் தொடங்கினர். எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நாங்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தோம்; அவர்கள் துப்பாக்கி முனையில் எங்களைச் சூறையாடினர். நிறுவனத்தின் கோப்புகள் உட்பட அனைத்தையும் அழித்து நாசம் செய்தனர்.
எங்கள் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களையும் திருடிச் சென்றுவிட்டனர். என் மொபைலை ஜன்னலுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்ததால் என்னால் அதைப் பாதுகாக்க முடிந்தது. பின் தூதரகத்தைத் தொடர்புகொண்டேன். துப்பாக்கிச் சூடு நடப்பதால், தூதரகத்தால் அதிகம் உதவிசெய்ய முடியவில்லை. அவர்கள் எங்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். மாலையில் மீண்டும் தூதரகத்திற்கு போன் செய்து உணவுப் பொருட்கள் கிடைக்காதது குறித்து தெரிவித்தோம்.
மேலும் 360 இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்பு! விமானம் மூலம் நாடு திரும்புதாகத் தகவல்
நாங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டபோது, ஒரு கிராமத்தில் தஞ்சம் அடைந்தோம். பின்னர் வேறு கிராமத்திற்குச் சென்று மீண்டும் தூதரகத்தைத் தொடர்புகொண்டோம். அதன்படி ஆறு பேருந்துகள் வந்தன. ஒவ்வொரு பேருந்திலும் 50 பேர் இருந்தனர். சூடான் துறைமுக நகரில் எங்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இந்திய கடற்படை வந்து எங்களை அங்கிருந்து அழைத்து வந்திருக்கிறது. நாங்கள் அங்கிருக்கும் எங்கள் உடைமைகள் எதையும் கொண்டுவர முடியவில்லை.
சூடானில் நிலைமை மிகவும் ஆபத்தாக இருக்கிறது. ஆயுத மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. துப்பாக்கிச் சூடு எனது வீட்டிற்கு பக்கத்திலேயே நடந்துவருகிறது. நாங்கள் ஜெட்டாவுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார். இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் தவித்ததாகச் மற்றொருவர் சொல்கிறார்.
அமெரிக்காவுக்குப் போய் 500 சதவீதம் அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள்! ஆய்வில் தகவல்
சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய விமானப்படையின் இரண்டு C-130J விமானங்கள் மற்றும் இரண்டு போர்க்கப்பல்கள் ஐஎன்எஸ் சுமேதா மற்றும் ஐஎன்எஸ் டெக் ஆகியவற்றை இந்தியா அனுப்பியுள்ளது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் ஜெட்டாவுக்குச் சென்றுள்ளார்.
சூடானில் 3,000 க்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சூடான் போரினால் இதுவரை 459 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.