Swaroopanand Saraswati: Shankarachrya:‘புரட்சிகர சாது’ துவராக பீடம் சங்கராச்சார்யா ஸ்வரூபானந்தா காலமானார்

By Pothy RajFirst Published Sep 12, 2022, 9:35 AM IST
Highlights

புரட்சிகர சாது என அழைக்கப்படும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள துவரகா பீடம் சங்கராச்சார்யா சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி நேற்று காலமானார். இவருக்கு வயது 99.

புரட்சிகர சாது என அழைக்கப்படும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள துவரகா பீடம் சங்கராச்சார்யா சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி நேற்று காலமானார். இவருக்கு வயது 99.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், ஷீரடி சாய் பாபாவை தெய்வமாக்கியதே கேள்வி எழுப்பியவரும், தனது மனதில் பட்ட மதரீதியான மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுவதற்கும் பெயர்பெற்றவர் சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி. 

மத்தியப்பிரதேசத்தில் உள்ள நரசிங்கபூர் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி நேற்று மாரடைப்பால் காலமானார். உத்தரகாண்டில் உள்ள ஜோதி பீடம் மற்றும் குஜராத்தில் உள்ள துவராகா சாரதா பீடத்தின் சங்கராச்சார்யாவாகவும் சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி இருந்து வந்தார். கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டநிலையில் நேற்று காலமானார்.

தேசிய கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ்? தேசிய அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!!

நரசிங்கப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி காலமானார் என சுவாமி சதானந்த் மகாராஜ் தெரிவித்தார்.

கடந்த ஓர் ஆண்டாகவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதிக்கு அடிக்கடி டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது, கடந்த இரு மாதங்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். வயது முதிர்வால் ஏற்படும் உடல்கோளாறுகள், நீரிழிவு ஆகியவை அதிகரித்து வந்தது உயிரிழப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது

சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதியின் உடல் அடக்கம் இன்று பிற்பகல் 3முதல் 4 மணி அளவில் நடக்கும் என ஆசிரம நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரின் உடல் படுக்கவைக்கப்படாமல், அமர்ந்தவாக்கில் சமாதிநிலையில் வைக்கப்படும் என்றும் ஆசிரமம் தெரிவித்துள்ளது.

கடந்த 1924ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் உள்ள சீனோய் மாவட்டத்தில் உள்ள திஹோரி கிராமத்தில் சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி பிறந்தார்.

அதிகரித்தது ED-ன் சோதனை நடவடிக்கை… பறிமுதல் செய்யப்படும் ரொக்கத்தை என்ன செய்வார்கள்?

இவரின் இயற்பெயர் போதிராம் உபாத்யாயே. தனது 9வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி கடவுளை காணச் செல்வதாகக் கூறி ஆன்மீகத்தில் சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி ஈடுபட்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி, கடந்த 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதால், புரட்சிகர சாது என்று அழைக்கப்பட்டார்.  ஆங்கிலேயர்களால் இருமுறை சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

துவராக பீடத்தின் சங்கராச்சார்யாவாக கடந்த 1981ம் ஆண்டு சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி பதவி ஏற்றஆர். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தனது 99வது பிறந்தநாளை சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி கொண்டாடினார். 

அயோத்தியில் உருவாகிவரும் ராமர் கோயில், கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வாட் கோயிலைப் போன்று கட்டப்பட வேண்டும என்று சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி அடிக்கடி கூறி வந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி கைது செய்யப்பட்டு சிறையும் சென்றுள்ளார்.

இதே நாளில் விவேகானந்தர் நடத்திய புகழ்பெற்ற சிகாகோ உரை.. பிரதமர் மோடி பகிர்ந்த கொண்ட சுவாரஸ்ய தகவல்

சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய பிரதேச முதல்வர் சுவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2012ம் ஆண்டு உத்தரகாண்டில் கங்கை நதியின் குறுக்கை அணை கட்டுவதற்கு எதிர்த்து போராடியவர் சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி, அதுமட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைச் சட்டம் 370 பிரிவை ரத்து செய்ததற்கும், பொதுசிவில் சட்டம் கொண்டுவரவும் ஆதரவு தெரிவி்த்தவர்
 

click me!