உத்தரகாண்டை புரட்டிப்போட்ட மேக வெடிப்பு... வெள்ளத்தால் வீடுகளை இழந்த குடும்பங்கள்!!

By Narendran SFirst Published Sep 11, 2022, 11:06 PM IST
Highlights

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் பல குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் பல குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன்  காரணமாக பெய்த கனமழையினால் பெரும்பாலான நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதை அடுத்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தர்சுலா, பித்தோரகார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஹெலிகாப்டர் மூலம் வான்வெளியில் ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: அதிகரித்தது ED-ன் சோதனை நடவடிக்கை… பறிமுதல் செய்யப்படும் ரொக்கத்தை என்ன செய்வார்கள்?

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பித்தோராகார் மாவட்டத்தில் மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டு அறிந்தார். குறிப்பாக கொட்டிலா கிராமத்தில் 58 குடும்பங்கள் வெள்ளத்தால் வீடுகளை இழந்துள்ளதாகவும் மாநிலத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வங்கி பணிக்கு முயற்சி செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!!

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் பலமுறை மேக வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதே நேரத்தில் தொடர் மழை பெய்வதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் மற்றும் போக்குவரத்து சாலைகள் சேதமடைந்துள்ளது. 

click me!