விநாயகர் சதுர்ச்சி ஊர்வலத்தில் பக்தி பாடலுக்கு உற்சாக நடனம் ஆடிய காவல்துறை.. வைரல் வீடியோ உள்ளே..

By Thanalakshmi V  |  First Published Sep 11, 2022, 3:51 PM IST

கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் நடைபெற்ற புகழ்பெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், திரளான மக்கள் பங்கேற்று, முழு உற்சாகத்துடன் ஆடி பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இதில் ” கணபதி பாப்பா மோரியா” பாடலுக்கு போலீசார் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
மேலும் படிக்க:burberry: rahul gandhi: தேசமே பாருங்க! ராகுல் காந்தி அணியும் 41,000 ரூபாய் மதிப்புள்ள T-shirt: விளாசும் பாஜக

Tap to resize

Latest Videos

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் பத்து நாட்கள் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழாவில், இறுதி நாளாக சிலை கரைக்க எடுத்து செல்லும் ஊர்வலத்தில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையும், கடவுள் கணபதியின் பக்தி பரவசமான பாடலுக்கு மகிழ்ச்சியோடு நடனமாடியுள்ளனர். இதில் பெண் காவலர்களும் அடக்கம். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக நடைபெற்றது. ​​மகாராஷ்டிரா முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பாக பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

மேலும் படிக்க:“திருப்பூரில் 20 ஆயிரம் டி-சர்ட்.. ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை என்ன ?”.. கே.எஸ் அழகிரி கொடுத்த விளக்கம்.!

click me!