"பண பிரச்சனை கட்டுக்குள் வந்துவிட்டது" – அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து

First Published Jan 2, 2017, 10:14 AM IST
Highlights


டிஜிட்டல் பொருளாதாரமே, இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு, இந்தியாவின் சிறந்த ஆண்டாக இருந்தது. உலகில் அதிவேகமாக பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா சிறப்பாக இருந்தது. இனி வரும் ஆண்டிலும், இது தொடரும்.

பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வட்டி விகிதமும் குறைய துவங்கிவிட்டது. புதிய ரூபாய் நோட்டுகள் மறு சுழற்சி வருவது என்பது சுமுகமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி., மசோதா அமல்படுத்தப்படும். டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும். கறுப்பு பணம் உள்ளிட்ட பல்வேறு பணம் வங்கிக்கு திரும்பியுள்ளது. இதனால், வங்கிகள் கடன் வழங்கும் திறன் அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பொது மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

click me!