காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளேடு அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன
காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளேடு அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையலி், அதற்குரிய ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களுக்காக நடக்கும் ‘பிரேதத் திருமணம்’: கர்நாடகாவில் எப்படி நடக்கிறது? விரிவான விளக்கம்
மத்திய டெல்லியில் உள்ள ஐடிஓ, பகதூர்ஷா ஜாபர் மார்கில் அமைந்துள்ள ஹெரால்டு ஹவுஸில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அசோசியேட் ஜர்னல் நடத்தும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, அதன் சொத்துக்கள் இருக்குமிடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி.யிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துவிட்டனர். இந்த விசாரணைக்குப்பின் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் அவர்கள் ஏதேனும் தகவல் வெளியிட்டதன் அடிப்படையில் ரெய்டு நடத்தப்படுகிறதா என்பதும் தெரியவில்லை.
கர்நாடகாவில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: மைசூரு-ஹாசன் நெடுஞ்சாலையில் மாணவர்கள் போராட்டம்: தீவைப்பு
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன.
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையா நினைவாக அஞ்சல்தலை வெளியீடு
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்தி இருவரிடமும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி முடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.