திருப்பதி கோவில் வரலாற்று சாதனை.. இதுவரை இல்லாத அளவு குவிந்த உண்டியல் காணிக்கை.. எவ்வளவு கோடி தெரியுமா

By Ajmal Khan  |  First Published Aug 2, 2022, 1:23 PM IST

திருப்பதி கோயிலில் இதுவரை இல்லாத அளவாக  கடந்த ஜூலை மாதம் காணிக்கையாக 139 கோடி ரூபாய் வசூலித்து ஏழுமலையான் கோவில் உண்டியல் சாதனை படைத்துள்ளது. 


திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள்

 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து குவிந்து வருகின்றனர். தங்களுடைய நேற்றி கடனை செய்ய வேண்டும் என்பதற்காக நீண்ட வரிசையில் சில நாட்கள் காத்திருக்கும் நிகழ்வும் நடைபெறும் அந்த வகையில், பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளையும் தங்கும் விடுதிகளையும் அமைத்துள்ளது. திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒன்று திருப்பதி பாலாஜி, மற்றொன்று திருப்பதி லட்டு பிரசாதம். வேறெங்கும் இல்லாத அளவிற்கு அவ்வளவு தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். திருப்பதி மலைக்கு சென்று வருபவர்களை பிரசாதமாக லட்டுகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தருவார்கள்.  இந்தநிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 31 நாட்களில் ( ஒரு மாதத்தில்) ஏழுமலையானுக்கு பக்தர்கள் 139 கோடியே 45 லட்ச ரூபாயை கோவில் உண்டியலில் காணிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர். இதன் மூலம் தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரே மாதத்தில் ஏழுமலையான் உண்டியல் அதிக காணிக்கையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

Tap to resize

Latest Videos

பரபரப்பு !! மீண்டும் ஒரு தேர் விபத்து.. அப்படியே சரிந்து விழுந்த கோவில் தேர்.. காரணம் இது தான்.. வெளியான தகவல்

களைகட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்...2 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய பக்தர்கள்...

வரலாற்று சாதனை படைத்த திருப்பதி

இதற்கு முன்னதாக கடந்த மே மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.130 கோடியே 5 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்திருந்தது. கடந்த மே மாதத்தில் மட்டும் கோடை விடுமுறை காரணமாக சுமார் 22.62 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  இது தவிர கடந்த ஜூலை மாதம் முதல் ஐந்து நாட்களில்  ஐந்து கோடி ரூபாயும்,  அதே மாதத்தில் 4 ம் தேதி மட்டும் 6 கோடியே 18 லட்சம் ரூபாயும் காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏழுமலையானுக்கு ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜூலையில் நிகழ்ந்த வரலாற்று சாதனையானது திருப்பதி மலையை மறைக்கும் காணிக்கையை பெற்று சாதித்துள்ளது.

இதையும் படியுங்கள்

திடீர் மயக்கம்...சூடான கூழ் அண்டாவில் விழுந்தவர் பலி...! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்
 

click me!