உலகிலேயே மிகவும் மோசமான மாசுள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி தொடர்ந்து 2வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று குலோபள் ஏர் இனிசியேட்டிவின் ஹெல்த் எபெக்ட்ஸ் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான மாசுள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி தொடர்ந்து 2வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று குலோபள் ஏர் இனிசியேட்டிவின் ஹெல்த் எபெக்ட்ஸ் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.
அமெரி்க்காவின் ஹெல்த் எபெக்ட்ஸ் இன்ஸ்டியூட்(எஹ்இஐ), இன்ஸ்டியூட் பார் ஹெல்த் மெட்ரிக்ஸ் மற்றும் இவாலுவேஷன் குலோபல் பர்டன் டிசீஸ் ரிப்போர்ட் ஆகியவை இணைந்து சர்வதேச அளவில் நகரங்களில் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டன.
காற்றில் நுண்தூசிகளான PM.2 அளவிலும், நைட்டரஜன் டையாக்ஸைடு(NO2) அடிப்படையில் நகரங்களின் மாசு கணக்கிடப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தலைமுடியின் கனத்தைவிட சிறிதாக இருக்கும் இந்தத் துகள்கள் காற்றில் கலந்து சதவீதம் அதிகரி்க்கும்போது அதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள், சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
இதில் சாலைப் போக்குவரத்து நெரிசல், அதிக அளவில் வாகனங்கள் செல்லுதல் போன்றவை நைட்ரஜன் டையாக்ஸைடு வெளியேறி காற்றில் கலக்க காரணமாகும்.
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு
மோசமான மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 2வது முறையாக டெல்லி முதலிடத்திலும், 2-வது இடத்தில் கொல்கத்தா இடம் பெற்றுள்ளது. மும்பை நகரம் 14-வது இடத்தில் இருக்கிறது. டெல்லியில் ஆண்டு சராசரியாக பிஎம்.2.5, 110சிஎம், கொல்கத்தாவில் 84சிஎம் உள்ளன.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, காற்றின் நுண்தூசிகளின் அளவு ஒரு கியூபிக் மீட்டருக்கு 5 மைக்ரோகிராம் அளவு இருக்கலாம். ஆனால், டெல்லியில் அதைவிட 22 மடங்கு அதிகமாக 110சிஎம் உள்ளன.
பிஎம்.2.5 அதிகரிப்பால் நோய் ஏற்பட்டு மரணம் அடைபவர்களில் பெய்ஜிங் நகரம் ஒரு லட்சம் பேருக்கு 124 பேர் உயிரிழப்பு என்ற அபாயமான இடத்தில் இருக்கிறது. டெல்லி 6-வது இடத்தில் ஒரு லட்சம் பேருக்கு 106 பேரும், கொல்கத்தா ஒரு லட்சம் பேருக்கு 99 பேரும் உயிரிழக்கிறார்கள். சீனாவில் உள்ள 5 நகரங்கள் டாப் 20 பட்டியலில் உள்ளன.
நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேற்றத்தில் மோசமான நகராக சீனாவின் ஷாங்காய் நகரம் உள்ளது. நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேற்றத்தில் டாப்-20 பட்டியலில் எந்த இந்திய நகரமும் இல்லை. ஷாங்காய் நகரில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 41.6 மைக்ரோகிராம் நைட்ரஸ்ஆக்ஸைடு உள்ளது.
டாப்-20 மாசடைந்த நகரங்கள் பட்டியல்
1. டெல்லி, இந்தியா(110சிஎம்)
2. கொல்கத்தா, இந்தியா(84)
3. கானோ, நைஜிரியா(83.6)
4. லிமா, பெரு(73.2)
5. டாக்கா, வங்கதேசம்(71.4)
6. ஜகார்த்தா, இந்தோனேசியா(67.3)
7. லாகோஸ், நைஜிரியா(66.9)
8. கராச்சி, பாகிஸ்தான்(63.6)
9. அக்ரா, கானா(51.9)
10. பெய்ஜிங், சீனா(55)
11. செங்டு சீனா(49.9)
12. சிங்கப்பூர், சிங்கப்பூர்(49.4)
13. அபிடிஜன் (47.4)
14. மும்பை, இந்தியா(45.1)
15. பமாகோ, மாலி(44.2)
16. ஷாங்காய், சீனா(40.1)
17. டுஷான்பே, தஜகிஸ்தான்(39.7)
18. டாஷ்கென்ட், உஸ்பெகிஸ்தான்(38)
19. கின்ஷாசா, காங்கோ(35.8)
20. கெய்ரோ எகிப்து(34.2)