மகாராஷ்டிராவில் படகில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்; தீவிரவாத தாக்குதல் சதியா? போலீசார் எச்சரிக்கை!!

By Dhanalakshmi GFirst Published Aug 18, 2022, 3:20 PM IST
Highlights

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் படகில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அந்த மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் கடற்கரைக்கு அருகே இன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்களுடன் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படகில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் ராய்காட் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

''ஹரிஹரேஷ்வர் கடற்கரை அருகே படகில் ஏகே 47 கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் ராய்காட் போலீஸ் எஸ்பி அசோக் துதே உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால், இந்தப் படகு விரைவுப் படகா அல்லது வேறு ஏதேனும் படகாக என்பது குறித்த தகவல்களை அவர் பகிரவில்லை. இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

36 மணிநேரத்துக்கு ரூ.38 லட்சம் செலவு! ட்ரம்ப் வருகைக்கு வாரி இறைத்த மத்திய அரசு: 2 ஆண்டுகளுக்குப்பின் பதில்

இந்தப் படகு ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. படகில் வந்தவர்கள் தங்களது வருகை பற்றி ஹரிஹரேஷ்வர் கடற்கரை போலீசாருக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்த கடற்கரை புனாவில் இருந்து 170 கி. மீட்டர் தொலைவிலும், மும்பையில் இருந்து 200 கி. மீட்டர் தொலைவிலும் உள்ளது. தீவிரவாத எதிர்ப்பு பாதுகாப்புப் படையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ராய்காட் எம்பி சுனில் தட்கரே கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேட்டியளித்து இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு பாதுகாப்புப் படை தலைவர் வினீத் அகர்வால், ''தீவிரவாதத்திற்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். இந்த படகு ஓமன் நாட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது அதிகாரப்பூர்வ படகு போல் தெரிகிறது. அது தீவிரவாத நோக்கத்திற்காகவும் இருக்கலாம். இது வேறு நாட்டுக்குச் சொந்தமானதாக இருக்கலாம். இது கைவிடப்பட்ட படகு.  நாங்கள் அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை விட சிறப்பாக செயல்படுகிறோம்: தமிழகம் ஏன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கணும்: பிடிஆர் விளாசல்

click me!